கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.
அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார்.
அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், சில வருடங்களுக்கு முன்பு கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.
இவர் நடித்த அண்ணாத்த, மோகன்லால் அவர்களுடன் நடித்த மரக்காயர் படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது செல்வராகவனுடன் சாணிக் காகிதம் என்னும் படத்தில் நடித்தார், இந்த படத்துக்காக கூட இவர் மீண்டும் தேசிய விருது பெறுவார் என எதிர்பார்க்க படுகிறது. பின் தெலுங்கில் இவர் மகேஷ் பாபுவுடன் நடித்த சர்காரு வாரி பட்டா என்னும் படம் Release ஆகி பட்டையை கிளப்பி விட்டது.
முதலில் அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், கடந்த சில நாட்களாக கவர்ச்சி ரூட்டுக்கு திரும்பியுள்ளார். இதனால், கவர்ச்சி புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வரும் அவர், சினிமாவிலும் கவர்ச்சியை காண்பிக்க ஆரம்பித்துள்ளார்.
தற்போது கீர்த்தி சுரேஷ் நடிகர் நானியுடன் தசரா படத்தில் நடித்துள்ளார். தசரா படத்தின் பிரமோஷனுக்காக நடிகை கீர்த்தி சுரேஷ் மும்பை சென்றிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் தசரா படத்தில் நானி மது குடிக்கும் ஸ்டைலை பார்த்து அப்படியே செய்திருக்கிறார். குடித்துவிட்டு பாட்டிலை போட்டுள்ள கீர்த்தி சுரேஷின் வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தில் வைரலானது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிய நிலையில் கலவையான கமெண்டுகளை பெற்றது.
இந்நிலையில், நடிகர் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்த தசரா படம் நேற்று திரைக்கு வந்தது. வசூல் ரீதியாவாகவும், மக்கள் மனதிலும் ஏகபோக வரவேற்பை தற்போது பெற்று வருகிறது.
இதுபோக தமிழில் உதயநிதி ஸ்டாலினுடன் ”மாமன்னன்” திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இப்படி கெரியரில் ஆக்டிவாக இருந்து வரும் கீர்த்தி சுரேஷ் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.
இதனிடையே, தற்போது கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார். அதில் கீர்த்தி சுரேஷ் கேரளா புடவை அணிந்து தலை நிறைய பூக்கள் வைத்து மான் போல துள்ளி குதித்து ஓடும் வீடியோவை பகிர்ந்து உள்ளார்.
மேலும் அந்த வீடியோவில், “உங்கள் அனைவரின் அன்பையும் பெற்று உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கும் வெண்ணிலா” என்றும், தசரா படத்துக்கு மக்கள் மத்தியில் கிடைத்த வெற்றியை இவ்வாறு வெளிப்படுத்தி உள்ளார்.
ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…
விஜய் டிவியில் கலகலப்பான தொகுப்பாளராக வலம் வந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. ஆரம்பத்தில ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர்,…
கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் கயல் சீரியல் நடிகை தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன் டிவியில் பிரைம்…
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் ரெட்ரோ. சூர்யாவின் கங்குவா படத்திற்கு பிறகு…
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
This website uses cookies.