நடுகடலுல கட்டுடலை காட்டி கிக் ஏற்றிய கீர்த்தி சுரேஷ் !

18 July 2021, 8:53 pm
Quick Share

மலையாளத்தில் தயாரிப்பாளரான சுரேஷ் குமார், நடிகை மேனகா தம்பதியின் இரண்டாவது மகள் தான் கீர்த்தி சுரேஷ். இவர் தன் அப்பாவின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர், அதன் பின் வளர்ந்த பிறகு, விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்த கீர்த்தி சுரேஷ், விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார்.

கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.இவர் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளி அன்று ரீலீஸ் ஆகவுள்ளது என்று அதிகாரப் பூர்வமாக கூறியுள்ளனர்.

கீர்த்திசுரேஷ்க்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் வெளியிடும் புகைப்படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து குஷியில் உள்ளனர். நடுகடலிலும், படகிலும் இருப்பது போல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். அதை பார்த்த ரசிகர்கள், ஆனாலும் தலைவிக்கு முன்னாடி இருந்த கொழுகொழு கன்னம் தான் அழகு என கமெண்ட் அடித்து வருகின்றனர்

Views: - 1959

82

46