தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு விக்ரம் பிரபு இயக்கத்தில் வெளிவந்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார்.
தொடர்ந்து விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ் இப்படி பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ் தற்போது ரகு தாத்தா திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. பெண்களின் சுதந்திரம் பற்றிய கருத்தை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மை வேடத்தில் நடித்திருக்கிறார்.
அதை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் வெளியான. தெறி படத்தின் இந்தி ரீமேக்காக எடுக்கப்பட்டிருக்கும் “பேபி ஜான்” திரைப்படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதில் நடிகை சமந்தா ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இப்படத்திற்காக கீர்த்தி சுரேஷ் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் ரூ. 2 கோடி சம்பளம் வாங்கி வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட்டிற்கு சென்றதும் ரூ.4 முதல் ரூ. 5 கோடி சம்பளமாக வாங்குகிறாராம். இதை அறிந்த ரசிகர்கள் பாலிவுட்டிற்கு போனதும் கீர்த்தி சுரேஷ் ரேஞ்சே மாறிடுச்சு போல சம்பளத்தை கிடுகிடு உயர்த்திட்டாங்களே என கூறி வருகிறார்கள்.
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…
ஸ்ட்ரெஸ் பஸ்டர் தமிழக சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது. இதனை Stress…
This website uses cookies.