10 கிலோ வரை உடலை குறைத்த குஷ்பு மகள்… குடும்பமே மாத்திரை சாப்பிட்டு தான் ஸ்லிம் ஆனீங்களா?

Author: Shree
11 August 2023, 3:13 pm
Quick Share

தமிழ் சினிமாவின் பப்ளி நடிகையான குஷ்பு 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார்.

இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர். குஷ்பு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். சமீப நாட்களாக குஷ்புவும் சரி அவரது மகள்களும் சரி உடல் எடையை குறைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு சிக்கென மாறி ஸ்லிம் பிட் தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் அவரது மூத்த மகால் சுமார் 10 கிலோ வரை எடை குறைத்து எடுத்துக்கொண்ட போட்டோக்கள் சில நாட்களுக்கு முன்னரே சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது. இந்நிலையில் அவரின் உடல் எடை ரகசியத்தை குறித்து கூறியுள்ளதாவது, நான் ஜங்க் ஃபுட்ஸ் கைவிட்டு பச்சை காய்கறிகள், கீரைகள் என அதிகம் உணவில் சேர்த்து டயட் இருக்க ஆரம்பித்தேன்.

அதுமட்டுமல்லாமல் காலையில் வாக்கிங், யோகா மாலையில் ஜிம்மில் வொர்க்கவுட், வாரத்திற்கு 2 முறை சைக்கிளிங். குளிர்பானங்கள், பால் போன்ற பொருட்களை அறவே ஒதுக்கி வெந்நீர் குடிப்பதை பழக்கமாக்கி கொண்டேன் இதெல்லாம் தான் எடை குறைப்பிற்கு காரணம் என அவர் கூறியுள்ளார். இதற்கு நெட்டிசன்ஸ், அதெப்படி குடும்பமே ஒரே நேரத்துல ஒல்லியானீங்க? மாத்திரை சாப்பிட்டு ஆங்கில மருத்துவ முறைப்படி உடலை குறைத்துவிட்டு ஏதேதோ கதை சொன்னா நம்புற மாதிரியா இருக்கு என விமர்சித்துள்ளனர்.

Views: - 279

0

0