விபத்தில் சிக்கிய நடிகை குஷ்பு, அப்பளம் போல் நொருங்கிய கார்- குஷ்புவின் நிலை?

18 November 2020, 1:14 pm
Quick Share

நடிகை குஷ்பு அவர்கள், தெலுங்கு, மலையாளம், தமிழ், ஹிந்தி என 80’s, 90’S- இல் ரவுண்டு காட்டி அடித்தார். இவர் ரஜினி, கமல், விஜய் போன்ற பல டாப் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால் அஜித்துடன் உன்னை தேடி படத்தில் வரும் ஒரு பாடலில் மட்டும் வருவார்.

எந்த நடிகைக்கும் அமையாத அளவுக்கு நடிகை குஷ்புவிற்கு கோவில் கட்டியது தமிழ்நாட்டு ரசிகர்கள்தான். இவருக்கும் இயக்குனர் சுந்தர் சி அவர்களுக்கும் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்தனர் இவர்களுக்கு 20 வயதில் 2 மகள்கள் உள்ளனர்.

இவர் அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜ.க கட்சியில் இணைந்தது உலகம் அறிந்தது தான்.

இந்த நிலையில் மேல் மருவத்தூர் அருகே கண்டெய்னர் லாரி மீது குஷ்புவின் கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கார் அப்பளம் போல் சுக்கு நூறாக நொருங்கியுள்ளது.

ஆனால் இந்த விபத்தில் தனக்கு எதுவும் ஆகவில்லை, கடவுள் ஆன முருகன் தான் தன்னை காப்பாற்றினார், என் கணவர் முருகன் மீது வைத்திருக்கும் பக்தி இன்று நிரூபிக்கப்பட்டது, என குஷ்புவே தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.