பாலிவுட்டில் “யாடைன்” என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தவர் கிரண். இவர் தமிழில் “ஜெமினி” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே இளைஞர்களின் மத்தியில் கனவுக்கன்னியாக வலம் வரத்தொடங்கினார்.
அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் அழகு பதுமையாக ஜொலித்த கிரணிற்கு ஒரு காலகட்டத்திற்குப் பிறகு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கிவிட்டன. சமீப காலமாக மிகவும் அரைகுறை ஆடையுடன் பல கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் கிரண். இந்த நிலையில் திடீரென இவரது அந்தரங்க வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆனது.
தனது அந்தரங்க வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து அதிர்ச்சியடைந்த கிரண், தனது இன்ஸ்டா பக்கத்தில் இது குறித்த விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், “டிஜிட்டல் முறையில் மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோ ஒன்று எனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையிலும் எனது தனியுரிமையை ஆட்கொள்ளும் வகையிலும் பரப்பப்பட்டு வருகிறது.
இது குறித்து சைபர்கிரைம் போலீஸாரிடம் நான் புகார் அளித்துள்ளேன். அப்புகாரின் அடிப்படையில் நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். இது போன்ற வீடியோவை பதிவிறக்கம் செய்வதோ அல்லது பிறருக்கு பகிர்வதோ சட்டப்படி குற்றமாகும். ஆதலால் பொறுப்போடு நடந்துகொள்ளுங்கள்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த திருமாவளவன் செய்தியாளர்களுக்கு…
அரசியல்வாதி விஜய் விஜய் நடித்து வரும் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் விஜய் இடம்பெறும்…
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஒரு கோவிலுக்குள் ஐந்து வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து குற்றம்…
சுமாரான வரவேற்பு சந்தானம் நடிப்பில் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் கடந்த மே 16 ஆம் தேதி வெளியான “டிடி நெக்ஸ்ட்…
அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை…
கேப்டன் விஜயகாந்த் குறித்து அவரது நண்பர் பகிர்ந்த விஷயம் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. விஜயகாந்த்தை வைத்து படம்…
This website uses cookies.