ஒரே நேரத்தில் உடல் எடை குறைத்த குஷ்பு – பிரபு ..! ட்விட்டரில் ஓகே சொன்ன குஷ்பு..! சின்னத்தம்பி 2 தயாராகுமா?

Author: kavin kumar
1 October 2021, 4:44 pm
Quick Share

தர்மத்தின் தலைவன், வருஷம் 16, சின்னதம்பி என ஹிட் படங்கள் மூலம் தமிழில் கொடிகட்டி பறந்தவர் குஷ்பூ. தமிழைத் தவிர்த்து, மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தார்.

சொல்லப்போனால், எந்த நடிகைக்கும் அமையாத அளவுக்கு நடிகை குஷ்புவிற்கு கோவில் கட்டியது தமிழ்நாட்டு ரசிகர்கள்தான். இவருக்கும் இயக்குனர் சுந்தர் சி அவர்களுக்கும் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்தனர் இவர்களுக்கு 20 வயதில் 2 மகள்கள் உள்ளனர்.

சினிமா வாய்புகள் குறைந்து போகவே அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தார் குஷ்பு. தற்போது, அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில், நடிகை குஷ்பூ தன் குண்டு உடம்பை எல்லாம் குறைத்து, ஸ்லிம்மாக போஸ் கொடுத்த Glamour புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகின்றது.

அதே நேரத்தில் சின்னத்தம்பி படத்தில் குஷ்பு ஜோடியாக நடித்த பிரபு தற்போது பொன்னியின் செல்வன் படத்திற்காக உடல் எடை குறைத்து ஸ்லிம் ஆகி உள்ளார். இப்படி இருவரும் உடல் எடை குறைத்து உள்ளதால் சந்தோஷத்தில் உள்ள ரசிகர்கள் சின்னத்தம்பி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என கூறி வைக்கின்றனர்.

அவருடன் நெட்டிசன் குறிப்பிட்டு குஷ்புவை டேக் செய்து இருந்தார். அதற்கு தம்ஸ் அப் சிம்பல் போட்டு கமெண்ட் செய்துள்ளார். ஆக, குஷ்பு இதற்கு சம்மதம் தான் போல என ரசிகர்கள் மத்தியில் பேசிகொண்டு இருக்கிறார்கள்.

Views: - 378

1

0