தர்மத்தின் தலைவன், வருஷம் 16, சின்னதம்பி என ஹிட் படங்கள் மூலம் தமிழில் கொடிகட்டி பறந்தவர் குஷ்பூ. தமிழைத் தவிர்த்து, மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தார். சொல்லப்போனால், எந்த நடிகைக்கும் அமையாத அளவுக்கு நடிகை குஷ்புவிற்கு கோவில் கட்டியது தமிழ்நாட்டு ரசிகர்கள்தான். இவருக்கும் இயக்குனர் சுந்தர் சி அவர்களுக்கும் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்தனர் இவர்களுக்கு 20 வயதில் 2 மகள்கள் உள்ளனர்.
சினிமா வாய்புகள் குறைந்து போகவே அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தார் குஷ்பு. தற்போது, அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், நடிகை குஷ்பூ தன் குண்டு உடம்பை எல்லாம் குறைத்து, ஸ்லிம்மாக மாறியுள்ளார்.
இந்நிலையில், நடிகை குஷ்பு அண்மையில் பேட்டி ஒன்றில் தன்னுடைய எட்டு வயதில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் அவர், தன்னுடைய அப்பா, தன் அம்மாவை அதிகமாக அடிப்பார் என்றும், சிறு வயதில் ஆண் பிள்ளையோ, பெண் பிள்ளையோ பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டால், அதனால் ஏற்படும் பயம் அவர்களின் வாழ்க்கை முழுவதும் துரத்தி கொண்டே இருக்கும் என தெரிவித்தார்.
ஒரு ஆண்மகன் கட்டுன மனைவியை அடிப்பது, பெற்ற குழந்தைகளை பாலியல் கொடுமை செய்வதையெல்லாம் பிறப்புரிமை என்று நினைத்திருக்கலாம் எனவும், தனக்கு ஒரு 8 வயது இருக்கும் போது, அந்த வயதில் தன்னுடைய அப்பாவால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன்.
அதை எதிர்த்து கேள்வி கேட்க தன்னால் முடியவில்லை. ஏனென்றால் தான் ரொம்ப சின்ன பொண்ணு என்றும், அம்மாவிடம் கூறினால் நம்புவார்களா? என்று தெரியவில்லை. அதற்கு காரணம் என் அம்மா கணவனவே கண்கண்ட தெய்வம் என்று சொல்லி வாழும் ஒரு ஜீவன் எனவும், அதனால் அவரிடம் சொல்லல என்றும், தொடர்ந்து அப்படியே செய்து வந்தார்.
அவரை எதிர்த்து கேள்வி கேட்க தனக்கு 15 வயதில் தான் தைரியம் வந்தது. அப்புறம் தனக்கு 16 வயது ஆன போது தங்களை விட்டு சென்றுவிட்டார் எனவும், அதன் பின்னர் அடுத்த வேளை சோற்றுக்காக என்ன செய்ய போகிறோம் என்று தெரியாமல் நின்றோம் என்று மனவலியுடன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.