தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையும் இயக்குனருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் சொல்வதெல்லாம் உண்மை தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலமாக மிகப்பெரிய அளவில் பேமஸானார்.
அந்த நிகழ்ச்சியின் மூலம் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்ட லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு தொடர்ச்சியாக திரைப்பட வாய்ப்புகள் கிடைத்ததோடு மிகப்பெரிய சர்ச்சைகளிலும் தொடர்ந்து சந்தித்து வந்தார்.
அந்த நிகழ்ச்சி அவருக்கு பெயரும் புகழும் ஏற்படுத்திக் கொடுத்ததோடு அதிக சர்ச்சைகளில் சிக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் பிறகு அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் தனக்கு படப்பிடிப்பில் நடந்த மிகவும் கொடுமையான அனுபவத்தை குறித்து வெளிப்படையாக மனம் திறந்து பேசி இருக்கிறார் .
அதாவது நான் எல்லாம் அவன் செயல் படத்தில் நடித்தபோது அப்படத்தின் இயக்குனர் சாக்ஷி கைலாசும் நடிகர் மனோஜ் கே ஜெயன் அவரும்…நான் அவர்களை தாண்டி சென்ற போது என்னை மோசமாக கிண்டல் செய்து கமெண்ட் அடித்தார்கள். உடனே நான் திரும்பி அவர்களிடம் சென்று சொல்ல வேண்டிய அந்த வார்த்தையை சொல்லிவிட்டு திரும்பினேன்.
அதிலிருந்து அவர்கள் இருவரும் என்னை படாத பாடுபடுத்தி நிறைய டார்ச்சர் கொடுத்தார்கள். அந்த வார்த்தை சொன்ன பின் அவர்கள் என்னை பண்ணாத டார்ச்சர் இல்லை. மானிட்டர் பார்த்துக் கொண்டு நான் நடிக்கும் போது திடீரென என் கையில் வந்து தட்டினார். என் முகம் ஒரு மாதிரி ஏதோ ஒரு ரியாக்ஷன் கொடுத்ததால் அவருக்கும் எனக்கும் இடைவெளி வந்தது.
அதன் பிறகு அந்த முகத்தில் லைட் அடிக்காதீங்க… அசிங்கமா கட்சி எடுங்க…கேமரா நகர்த்தி வையுங்க இப்படி தேவையில்லாத காட்சிகளுக்கு எல்லாம் 10 டேக் எடுக்க சொல்லி டார்ச்சர் செய்தார். இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் மிகவும் போல்டான தைரியமான பெண்மணியான உங்களுக்கு இவ்வளவு டார்ச்சர் நடந்து இருக்கா? என ஷாக் ஆகிவிட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.