சமந்தாவை போலவே கொடிய நோயால் பாதிக்கப்பட்ட தமிழ் பட நடிகை.. போட்டோவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படம் சகுந்தலம். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு பிறகு, மயோசிட்டிஸ் என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா, சிகிச்சை பெற்று வந்தார். மேலும், இதற்காக மேற்சிகிச்சை எடுத்துக்கொள்ள அமெரிக்கா சென்று வந்தார்.

கடும் நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் சமந்தா மனம் தளராது, திரைப்பட பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், சமந்தாவை போலவே மற்றொரு நடிகை கொடிய நோயால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான சிவப்பதிகாரம் என்ற திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மம்தா மோகன்தாஸ். இதனை தொடர்ந்து, ’குரு என் ஆளு’ ’தடையறத் தாக்க’ போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.

சமீபத்தில், ஆர்யா நடிப்பில் வெளியான எனிமி என்ற திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவாகி வரும் ’கருமேகங்கள் கலைகின்றன’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மம்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் ஒரு கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2013ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மம்தா மோகன்தாஸ் அதற்கான சிகிச்சை மேற்கொண்டு உடல்நிலை தேறி வந்தார். இந்நிலையில், தற்போது திடீரென விட்டிலிகோ (Vitiligo) என்ற நோய் தன்னை தாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த நோய் தோலின் நிறத்தை இழக்க செய்யும் வகையை கொண்டது என்றும், எனவே தான் கொஞ்சம் கொஞ்சமாக நிறத்தை இழந்து வருவதாக அவர் குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

21 minutes ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

1 hour ago

பார்த்தாலே தெரியுது, படம் ஃபிளாப்னு- பிரபாஸின் புது பட டீசரால் கடுப்பான ரசிகர்கள்…

பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…

3 hours ago

அதிமுக மூத்த தலைவருடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு… செல்லூர் ராஜு சொன்ன விளக்கம்!

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…

3 hours ago

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு.. டுவிஸ்ட் வைத்த பாஜக!

மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…

4 hours ago

வடசென்னை 2 டிராப்? வெளிப்படையாக போட்டுடைத்த வெற்றிமாறன்!

மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…

4 hours ago

This website uses cookies.