எப்படி உங்க இருவருக்கு மட்டும் வயசு இறங்கிட்டே போகுது “ஷோபானாவுடன் மஞ்சுவாரியர்” லேட்டஸ்ட் Pics!!

Author: kavin kumar
3 February 2022, 2:51 pm
Manju Warrier_Shobana_Actress
Quick Share

நடிகை ஷோபனா தமிழ்,தெலுங்கு, இந்தி, கன்னடம் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் சேர்த்து கிட்டத்தட்ட 230 படங்களில் நடித்தவர் . இவர் தமிழில் ‘தளபதி’, ‘எனக்குள் ஒருவன்’, ‘இது நம்ம ஆளு’ போன்ற பல படங்களில் நடித்து மக்களிடையே மிகவும் பிரபலமானார்.

நடிகை ஷோபனா 50 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளவில்லை. நாட்டியத்தில் தனது முழு வாழ்கையையும் அர்பணித்தார். இவர் கலைத்துறையில் சாதனை பெற்று பத்மஸ்ரீ , “கலா ரத்னா” போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். சென்னையில் “கலார்ப்பனா” என்னும் நடனப்பள்ளி ஒன்றை சிறப்பாக நடத்தி வருகிறார்.

ஷோபனா அண்மையில் நடிகை மஞ்சு வாரியருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. மலையாளத்தில் பல படங்களில் நடித்து மிக பெரிய ஹீரோயினாக இருந்தாலும், தமிழில் இவர் நடித்த முதல் படம் அசுரன். அந்த படம் இவர் நடிக்கும்போது இவருக்கு வயது 42. வயது ஏற ஏற, இளமை பூத்து குலுங்கும் வகையில் அவ்வளவு அழகாக சிக்கென்று இருக்கிறார் நடிகை மஞ்சு வாரியர்.

இப்போது மலையாளத்தில் சதுர்முகம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக உடல் எடையை குறைத்தது மட்டுமில்லாமல் செம்ம ஸ்டைலிஷாகவும் மாறியுள்ளார் மஞ்சுவாரியர் . நடிகை ஷோபனாவும் நடிகை மஞ்சு வாரியரும் சந்தித்து கொண்ட புகை படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர் . அப்போது இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர் . இந்த புகைப்படத்தை ஷோபனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் . இதனை பார்த்த ரசிகர்கள் உங்க இருவருக்கும் வயசு reverse ல போகுது என்று கமெண்ட் செய்து வருகின்றனர் .

Views: - 952

0

0