‘நோ’ சொன்ன அஜித்: துணிவு புரமோஷன் நிகழ்ச்சியில் திடீரென ‘கெட்ட வார்த்தை’ பேசிய மஞ்சு வாரியர்..! (வீடியோ)

Author: Vignesh
9 January 2023, 1:00 pm
Quick Share

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை உள்ளிட்ட 2 திரைப்படங்களைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் போனி கபூர் – இயக்குநர் H.வினோத் – அஜித் குமார் கூட்டணியில் உருவாக்கப்பட்ட 3ஆவது திரைப்படம் ‘துணிவு’. இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, பால சரவணன், பிரேம் குமார், ஜான் கோக்கென், பவானி ரெட்டி, ஜி பி முத்து போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

ThunivuAjith_updatenews360

இப்படத்தில் அஜித்தின் ஸ்டைலும், கெட்டப்பும் செம மாஸாக உள்ள புகைப்படங்களை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். துணிவு படத்தில் இடம் பெற்றுள்ள ஜில்லா ஜில்லா, காசேதான் கடவுளடா, கேங்கஸ்டா ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன், துணிவு படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை பிரமிக்க வைத்தது.

thunivu---updatenews360

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படம் குஜராத்தில் நடந்த வங்கி கொள்ளை உண்மை சம்பவத்தை மையப்படுத்திய படம் என சொல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் ட்ரைலர் வெளியானதில் இருந்து வங்கி கொள்ளை சம்மந்தப்பட்ட கதை தான் என பலரும் உறுதி செய்து கூறி வந்தனர்.

thunivu-updatenews360 3

இந்நிலையில், வழக்கம்போல் அஜித் புரமோஷனுக்கு நோ சொல்லிவிட்டதால், இயக்குனர் எச்.வினோத்தும், நடிகை மஞ்சு வாரியரும் தான் தொடர்ந்து பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் துணிவு புரமோஷன் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் இயக்குனர் எச்.வினோத்தும், நடிகை மஞ்சு வாரியரும் கலந்துகொண்டனர்.

Manju Warrier - updatenews360

அப்போது துணிவு படத்தில் அஜித் பேசிய டயலாக் ஒன்றை பேசிக்காட்டுமாரு நடிகை மஞ்சு வாரியரிடம் தொகுப்பாளர் கேட்டார். உடனடியாக எழுந்து வந்து, கையில் துப்பாக்கியுடன் அஜித் பேசிய கெட்டவார்த்தை டயலாக்கை பேசிக்காட்டி அதிர்ச்சி கொடுத்தார் மஞ்சு வாரியர். கெட்ட வார்த்தையில் பேசிவிட்டு அதனை பீப் போட்டு விடுமாறு அவர் சொல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

Views: - 340

2

0