தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது கேரியரை தொடங்கியவர் நடிகை மீனா. ரஜினி, கமல், அஜித், அர்ஜுன் என முன்னணி நடிகர்களின் ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்து 80ஸ் மற்றும் 90ஸ் களில் கனவு கன்னியாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். ரஜினி உடன் குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த இவர், பின்னர் வீரா மற்றும் முத்து திரைப்படங்களில் ஜோடியாக நடித்தார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி திரைப்படங்களிலும் பிரபல நடிகையாக இருந்து வந்த இவர், 2009ம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். கடந்த ஆண்டு மீனாவின் கணவர் உடல்நிலை குறைவால் காலமானார். கணவரின் மறைவால் துக்கத்தில் இருந்த மீனா, அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்.
தனது பிறந்த நாள் கொண்டாட்டம், தோழிகளுடன் வெளியே செல்வது, ஷூட்டிங் என நேரத்தை செலவிட்டு வருகிறார். தற்போது சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் மீனா. இந்நிலையில் மீனா, ஆண் வேடத்தில் நடிக்க இருந்த திரைப்படம் குறித்து ஒரு சுவாரஸ்ய தகவல் வெளிவந்துள்ளது.
1982ம் ஆண்டு நடிகர் விஜயக்குமார் தயாரிப்பில் மேஜர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் சிவாஜி கணேசன், லட்சுமி, மஞ்சுளா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “நெஞ்சங்கள்”. இத்திரைப்படத்திற்கு சிறுவன் கதாப்பாத்திரத்தில் நடிக்க குழந்தை நட்சத்திரத்தை தேடி வந்தனர். அப்போது ஒரு விழாவில் சிறு வயது மீனாவை பார்த்திருக்கிறார் சிவாஜி கணேசன்.
அவருக்கு மீனாவை மிகவும் பிடித்துப்போக, படக்குழுவினர் மீனாவின் தாயாரிடம் சென்று “ஒரு பையன் கதாப்பாத்திரத்திற்கு மீனாவை நடிக்க வைக்கலாமா?” என கேட்டிருக்கின்றனர். அதற்கு அவர், “பையனாக நடிக்க வேண்டும் என்றால் மீனாவின் முடியை வெட்ட வேண்டி இருக்கும்” என கூறி மறுத்துவிட்டார். எனினும் மீனாவை விட அவர்களுக்கு மனம் வரவில்லை. ஆதலால் படக்குழுவினர் பையன் கதாப்பாத்திரத்தை சிறுமி கதாப்பாத்திரமாகவே மாற்றிவிட்டனர். அதன் பிறகுதான் அத்திரைப்படத்தில் மீனா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
30, 40 வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் இன்றைய தலைமுறையினருக்கு தெரிய வாய்ப்பில்லை. இந்த தகவல் தற்போது சமூக வலைளதங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.