தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை மீனா. தமிழில் ரஜினி,கமல், அஜித், விஜய், சத்யராஜ், பிரபு என டாப் நடிகர்களுடன் நடித்துள்ளார்.
அதே போல, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். மீனாவின் கணவர் நடிகை மீனாவின் கணவர் வித்யா சாகர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி அதிலிருந்து மீண்டார். அதன் பிறகு கடுமையான நுரையீரல் பாதிப்பால் ஆக்சிஜன் சிலிண்டருடன் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வு என்ற நிலையில், உடல் உறுப்புக்காக பதிவு செய்து காத்திருந்தனர்.
6 மாதங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த வித்யா சாகருக்கு மாற்று உறுப்புக்காக 3 மாதத்திற்கும் மேலாக காத்திருந்த நிலையில், இருதயத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் உயிரிழந்தார். கணவரின் இறுதி சடங்குகளை மீனாவே செய்தது கல் நெஞ்சத்தையும் கரைய வைத்தது.
மெல்ல மெல்ல இயல்பு நிலை கணவரின் மரணத்திற்கு பிறகு வீட்டிலேயே முடங்கிக் கிடந்த மீனாவை அவரின் தோழிகளான சங்கவி, சங்கீதா, ரம்பா, குஷ்பு, ராதிகா என பலரும் வீடு தேடி சென்று அவரை பார்த்து ஆறுதல் கூறி அவரை வெளியில் அழைத்து வந்தனர். குடும்பம் குட்டி என்று இருந்த ரம்பா, மீனாவுக்காக வெளிநாட்டிலிருந்து வந்தார். தற்போது, மீனா மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளார்.
இந்நிலையில், முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் நடித்த வாரிசு திரைப்படம் 2023 பொங்கலுக்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் நடிகை மீனா அளித்த பேட்டியில் ” விஜய்யின் பிரண்ட்ஸ் படத்தில் நடிகை தேவயானிக்கு பதிலாக நான் நடிக்க வேண்டியது, சில பிரச்சனை காரணமாக அந்த படம் மிஸ் ஆகிவிட்டது என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து கூறிய அவர், ப்ரெண்ட்ஸ் படத்தின் மலையாள வெர்ஷனில் தான் தான் நடித்து இருந்ததாகவும், ஆனால், தமிழில் தேதி பிரச்சினை காரணமாக தனக்கு அந்த வாய்ப்பு தவறியதாக தெரிவித்தார்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதலில் ஜோதிகா தான் நடித்திருந்தார். ஆனால் சில பிரச்சனைகளால் படத்தில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.