“சக்கரை பொங்கல் மாதிரி இருக்கீங்க” – மேகா ஆகாஷ் புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்

16 January 2021, 5:43 pm
Megha aakash - Updatenews360
Quick Share

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட படத்தில் ரஜினியுடன் கூட நடித்திருப்பார் மேகா ஆகாஷ். இதற்கு முன் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷுடன் நடித்த என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் வெளிவர ரொம்ப தாமதம் ஆகியதால் பேட்ட திரைப்படம் அவருக்கு முதல் படம் ஆகியது. அதில் சிம்ரனுக்கு மகளாக நடித்து அசத்தியிருப்பார்.

அதன்பின் வந்த ராஜாவா தான் வருவேன் என்று சுமாரான படத்தில் நடித்தவர், தற்போது காளிதாஸ் ஜெயராம் உடன் ஒரு பக்க கதை படத்தில் நடித்திருக்கிறார். அடுத்ததாக தமிழில் விஜய் சேதுபதியுடன் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ் தவிர தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்திருக்கிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் அழகாக போஸ் கொடுத்து வரும் மேகா ஆகாஷ் சமீபமாக வின்டேஜ் லுக்கில் போட்டோஷூட்டுகள் நடத்தி அதை இணையதளத்தில் பகிர்ந்து வருகிறார். அப்படி எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்ட அவரை பார்த்த ரசிகர்கள், சும்மா சக்கரை பொங்கல் கணக்கா இருக்கீங்களே என ரசித்து வருகின்றனர்.

Views: - 5

0

0