சந்தானத்துக்கு ஜோடியாக களமிறங்கும் சிம்பு பட நடிகை.., “வடக்குப்பட்டி ராமசாமி” புதிய அப்டேட் வெளியீடு..!!

Author: Vignesh
7 February 2023, 1:30 pm
santhanam - updatenews360
Quick Share

வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் குறித்து இணையத்தில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் மூலம் அறிமுகமாகி, தற்போது காமெடியில் முன்னணியாக திகழ்ந்து கொண்டிருப்பவர். தற்போது இவர் காமெடிக்கு ஓய்வு கொடுத்து ஹீரோவாக நடித்து வருகிறார்.

santhanam - updatenews360

அந்த வகையில் நடிகர் சந்தானம் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், A1, தில்லுக்கு துட்டு, டிக்கிலோனா போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இவர் நடித்த ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும், பொருளாதார ரீதியாக படுதோல்வி அடைந்தது.

santhanam - updatenews360

இதனிடையே, ‘டிக்கிலோனா’ படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் நடிகர் சந்தானம் நடிக்கவுள்ளார். அது போக எம்.எஸ்.பாஸ்கர், மாறன், ஜாக்குலின், ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி, ரவி மரியா மற்றும் இட் ஈஸ் பிரசாந்த் என ஒரு நட்சத்திர பட்டாளமே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

santhanam - updatenews360

இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தை குறித்து முக்கிய தகவல் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதாவது சந்தானம் நடிக்கும் வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் அவருக்கு ஜோடியாக சிம்பு படத்தில் நடித்த நடிகை மேகா ஆகாஷ் நடிக்க இருக்கிறார் என்று போஸ்டர் மூலம் படக்குழுவினர் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த போஸ்டர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

santhanam - updatenews360

Views: - 140

2

0