1985 ஆம் ஆண்டு இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த உன் கண்ணில் நீர் வடிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மௌனிகா.
சினிமா பெயரில் பல சாதனைகளை படைத்த பாலு மகேந்திராவின் சொந்த வாழ்க்கை மிகவும் சிக்கலாகவே இருந்தது. மூன்று திருமணங்களை செய்தார். முதலில் ஷோபனா என்பவரை திருமணம் செய்தார். ஆனால் சில பல காரணங்களால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்னர் அகிலா என்ற பெண்ணை திருமணம் செய்து அந்த உறவில் இருந்தபோதே நடிகை மௌனிகாவையும் திருமணம் செய்து கொண்டார்.
இவர் பாலு மகேந்திரா மீதும் சினிமா மீதும் காதல் வயப்பட்டதால் 28 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்துள்ளனர். இதனையடுத்து, 2014 ஆம் ஆண்டு இவர்கள் திடீரென பிரிந்து அதிர்ச்சியை கொடுத்தனர்.
இதனை அடுத்து இவர்கள் பிரிந்த நிலையில் சில வருடங்களில் பாலு மகேந்திரா உடல்நிலை சரியில்லாமல் மரணம் அடைந்தார். இந்நிலையில், மௌனிகா பாலு மகேந்திரா குறித்து பேட்டி ஒன்றில் மிக வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
அதாவது பாலு மகேந்திரா ஒரு கடிதம் ஒன்றை மௌனிகாவிற்காக எழுதியுள்ளார். அதில் தன்னுடைய வயோதிக சுமையை உன்னிடம் தினிக்க விரும்பவில்லை என்றும், அதனால் நாம் பிரிந்து விடுவோம் என்றும், எழுதியிருந்ததாக மௌனிகா தெரிவித்துள்ளார். ஆனால் இதைப் பற்றி கூறிய மௌனிகா வயோதிகம் என்ற காரணம் எல்லாம் இருந்திருக்காது எனவும், தன்னை யாராவது ஏதாவது செய்து விடுவார்களோ என்ற பயத்தினால் தான் அவர் பிரிந்திருப்பார் என்று தெரிவித்திருந்தார்.
மேலும் பாலு மகேந்திரா இவ்வாறு செய்தது மிகப்பெரிய தவறு என்றும், தன்னால் அவரை மன்னிக்கவே முடியாது எனவும், அவர் ஆன்மாவை கூட தன்னால் மன்னிக்க முடியாது என்றும், இப்போது வரை எந்த காரணமும் சொல்லாமல் போய்விட்டாரே என்று கவலையாக இருப்பதாகவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.