என்கிட்ட இல்லாதது அப்படி அவகிட்ட என்ன பெருசா இருக்கு ? நயன்தாராவை இழுத்து பேசிய பிரபல நடிகை !
30 August 2020, 2:57 pmபொதுவாக நடிகை நயன்தாரா தமிழில் தான் நடிக்கும் திரைப்படத்திற்கு சம்பளமாக வாங்கும் தொகை எவ்வளவு தெரியுமா 3 கோடி முதல் நான்கு கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்.
அதுமட்டுமல்லாமல் தெலுங்கில் 6 கோடி வரை சம்பளம் வாங்கிக்கொண்டு இருக்கிறாராம். நயன்தாரா போல சமந்தாவும் தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் நடிகை சமந்தா, ஒரு தயாரிப்பாளரிடம், “நயன்தாராவுக்கு 6 கோடி தரும் வகையில் எனக்கு மூன்று கோடி தந்தால் குறைந்தா போய்விடுவீர்கள்” என்று கூறியிருந்தாராம். அது மட்டுமில்லாமல் என்னிடம் இல்லாதது அவரிடம் அப்படி என்னதான் இருக்கிறது என்று கேட்டிருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த தயாரிப்பாளர் அவ்வளவுலாம் என்னால் கொடுக்க முடியாது என சமந்தாவிடம் கூறி அந்த இடத்திலிருந்து எழுந்து வெளியே சென்றுவிட்டாராம்.