“என்ன ஒரு சொந்த ஊர் பாசம் நயன்தாராவுக்கு”.. சினிமாவிற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு.?

Author: Mari
11 January 2022, 4:43 pm
Quick Share

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை நயன்தாரா தற்போது, இந்தியில் அட்லி இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார். நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் இப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் நடிகை நயன்தாரா தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். அவ்வப்போது தனது காதலரான விக்னேஷ் சிவனுடன் ஒரு சில படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், காத்துவாக்குல 2 காதல் படத்தின் டப்பிங் பணியிலும் நயன்தாரா ஈடுபட்டு வருகிறார்.

அதே சமயத்தில், தொழில் துறையில் முழு கவனம் செலுத்துவதற்காக, அடுத்த சில வருடங்களில், ஒரு சில படங்களில் மட்டும் நடித்து விட்டு, நடிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

துபாயில் 100 கோடிக்கு எண்ணெய் தொழில் தொடங்க உள்ளதாகவும், அதற்காக பலரிடமும் பல்வேறு தகவல்களை நயன்தாரா சேகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம், தற்போது உள்ள சூழ்நிலையில், கதாநாயகிகள் அதிகரித்திருப்பதே. வருங்காலத்தில் தனக்கு மார்க்கெட் இருக்குமோ என்பது தெரியாததால், தற்போதே நயன்தாரா சினிமாவை தாண்டி தொழிலில் கவனம் செலுத்தி வருமானம் பெற திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே நயன்தாராவிற்கு சென்னையில் 50 டீ கடைகள் வைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

Views: - 723

6

1