இப்படிபட்டவரா விக்னேஷ் சிவன்.. உருகும் நயன்தாரா..!

Author: Rajesh
3 February 2022, 5:03 pm

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றது. ஆனாலும் இவர் மீது பல புகார்களும் எழுந்து வருகின்றனர். படங்களில் புரமோஷனுக்கு வருவதில்லை, ஆனால் தன்னுடைய தயாரிப்பில் உருவான படங்களுக்கு புரமோஷனில் கலந்து கொள்வதாகவும் புகார்கள் எழுந்து வண்ணம் உள்ளன. நடிகை நயன்தாரா முதலில் நடிகர் சிம்புவை காதலித்து வந்ததாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற தகவல் வரை பரவியது. ஆனால் காரணம் எதுவும் கூறாமல் பிரிந்து விட்டனர். இதனையடுத்து பிரபுதேவாவை காதலித்து வந்தார் பொது நிகழ்ச்சிகளில் கூட இருவரும் கலந்து கொண்ட நிகழ்வுகளும் நடந்தேறின.

இதனிடையே பிரபுதேவாவுடன் பிரச்சனை வரும் போதெல்லாம், நீ சிம்புவை காதலித்த இருக்கிறாய் என்று அடிக்கடி பேசியதாகவும் இதனால் தான் இருவரும் பிரிந்து சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். விரைவில் இவர்களது திருமணம் நடைபெறும் தகவல் வெளியாகி வருகின்றது. ஆனால் விக்னேஷ் சிவன் நயன்தாராவிடம் சிம்பு, பிரபுதேவாவை பற்றி எந்த கேள்வியும் கேட்டதே கிடையாதாம். இந்த ஒரு நல்ல குணமுள்ள காரணத்தால் தான் தற்போது வரை நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

  • Sivrajkumar health update பிரபல கன்னட நடிகருக்கு புற்றுநோய் ..அடுத்தடுத்து காவு வாங்கும் டிசம்பர் மாதம்..சோகத்தில் ரசிகர்கள்..!
  • Views: - 2011

    38

    8