‘நீங்க யாருடன் பழகுறீங்க என்பது மிக முக்கியம்’ – மேடையில் நயன் சொன்ன அட்வைஸ்..!

Author: Rajesh
5 February 2023, 7:27 pm
Hottest Mum Nayanthara - Updatnews360
Quick Share

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா. நயன்தாரா நடிப்பில் கடைசியாக வெளியான படம் கனெக்ட். இவர் தற்போது, அட்லி இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ஜோடியாக ஜவான், மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ஒரு திரைப்படம், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ஒரு திரைப்படம் என அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார்.

ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இந்நிலையில், சென்னை சத்யபாமா கல்லூரியில் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நயன்தாரா, மாணவ – மாணவியருக்கு சிறப்பு உரை வழங்கினார். அப்போது நயன்தாரா கூறியதாவது, “கல்லூரி வாழ்க்கை என்பது மிக முக்கியமான ஒன்று, மகிழ்ச்சி நிறைந்தது.

இந்த காலகட்டத்தில் நீங்கள் யாருடன் இருக்கிறீர்கள், யாருடன் பழகுகிறீர்கள் என்பது மிக முக்கியமானது. இந்த கல்லூரி நாட்களில் நல்ல நண்பர்களை தேர்வு செய்து பழக வேண்டும். இந்த சமயத்தில் நீங்கள் எடுக்க கூடிய முடிவுகள் அனைத்தும் உங்கள் எதிர்காலத்திற்கானது என்பதை மறந்துவிடாதீர்கள். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு நீங்கள் வெளியே செல்லும் போது, சிறந்த நபராக வெற்றியடைந்த, திறமையானவராக இருக்க வேண்டும்.

எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும், பணிவாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும். மற்றவர்களிடம் நீங்கள் பணிவாக நடந்து கொள்ளும் போது, உங்கள் வாழ்க்கை இன்னும் அழகாக இருக்கும். கல்லூரியில் நண்பர்களோடு ஜாலியாக இருக்கலாம், ஆனால், உங்கள் பெற்றோருக்கும் நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தினமும் நீங்கள் அவர்களுக்காக ஒரு 10 நிமிடத்தை செல்வழிக்க வேண்டும், அதில் தான் அவர்களின் மகிழ்ச்சியே இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்” என்று பேசினார்.

Views: - 160

2

0