கோபுரம் நல்லா இருக்கு…. முட்டி போட்டு நயன்தாராவுக்கு முத்தம் : விக்கியை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்!!

Author: Rajesh
16 August 2022, 1:09 pm
Quick Share

தமிழ் திரையுலகில் நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் தான் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இவர்கள் இருவரும் சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிப்பில் காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடித்துள்ளனர்.

இதனிடையே, விக்னேஷ் சிவன், இயக்கவுள்ள நடிகர் அஜித்தின் 62வது படத்திலும் நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார். தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் பாலிவுட் படமான லயன் படத்திலும் நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா விசாரணை அதிகாரியாக நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகி வருகின்றன.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இதை தொடர்ந்து, தற்போது விக்கி மிகவும் ரொமான்டிக் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், பொது வெளியில்… நயன்தாராவுக்கு நச் என நெற்றியில் முத்தம் கொடுக்கிறார். இந்த லேட்டஸ்ட் ரொமான்டிக் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
Views: - 542

3

1