“ஐயோ, செல்லத்தை குத்துறாங்களே..” நயன்தாரா குத்திக்கொண்ட டாட்டூ, வைரல் போட்டோ..!

Author: Aarthi Sivakumar
10 August 2021, 10:19 am
Quick Share

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் நயன்தாரா. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர் ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார் .

அவரது நடிப்பில் லேட்டஸ்ட் ஆக வந்த விஸ்வாசம், பிகில், மூக்குத்தி அம்மன் திரைப்படங்களும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. தர்பார் படம் சரியாக போகவில்லை. தற்போது அண்ணாத்த, அதுமட்டுமில்லாமல் தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் காத்துவாக்குல ரெண்டு காதல் என்னும் படத்தில் நடிக்கிறார்.

தற்போது விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு அடிக்கடி அவுட்டிங் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார் நயன்தாரா. இந்நிலையில் நயன்தாரா டாட்டூ குத்தி கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த டாட்டூ திரைப்படத்திற்காக தற்காலிகமாக போட பட்டது போல் தெரிகிறது.

Views: - 1834

22

9