பிரபல சீரியல் நடிகையான நீலிமா ராணி தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமாகி அதன் பின்னர் சீரியல், திரைப்படம் என பிசியாக நடித்து வருகிறார். இவர்1992ம் ஆண்டு நடிகர் கமல் நடித்த தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
அதற்கு பிறகு பல திரைப்படங்களில் முகமறியப்பட்ட ரோல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான நடிகையானார். இதுவரை 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் 50க்கும் மேற்பட்ட சீரியல்களிலும் நடித்திருக்கிறார். இவர் கரத்தில் நடிப்பில் வெளியான நான் மகான் அல்ல திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த துணை நடிகைக்கான விருது வென்றார்.
அதன் பின்னர் நிறைய திரைப்பட வாய்ப்புகள் அவரை தேடி வர ” அமளி துமளி, இருவர் உள்ளம், பண்ணையாரும் பத்மினியும்” போன்ற திரைப்படங்களில் நடித்தார். இதனிடையே தன்னை விட மூத்த வயதினரான இசைவாணன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளது. நீலிமா ராணி சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது கணவரை ரசிகர்கள் கிண்டல் செய்வது குறித்து கூறி மனம் வருந்தினார்.
இந்நிலையில் தற்போது அவரின் சமீபத்திய பேட்டி ஒன்றில் இரண்டாவது குழந்தை பிரசவத்திற்கு பின்னர் படுகுண்டாக இருந்த தனது உடல் எடையை பார்த்து பலர் கிண்டல் செய்தார்கள். சில ஆபாசமாகவும் ட்ரோல் செய்தார்கள். ஆனால் நான் மிகவும் முயற்சிகள் செய்து ஸ்லிம் ஆனேன். நான் தினமும் கீரைகள் மற்றும் பச்சை காய்கறிகளை சாப்பிடுவேன். அதிக காரம், மசாலா சேர்த்த உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் வேக வைத்த உணவுகளை தான் அதிகம் சாப்பிட்டேன்.
மேலும், உடல் எடையை இயற்கையான முறையில் குறைக்க ஆளி விதை, சூரிய காந்தி விதை, பூசணி விதை, எள்ளு மற்றும் சியா விதைகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொண்டேன். இத்துடன் செம்பருத்தி டீ, பிளாக் காபி மற்றும் கிரீன் டீ போன்றவற்றை தினமும் குடித்து உடலின் ஆரோக்கியத்தில் அதிக கவனமாக இருந்து பின்னர் வெயிட் லாஸ் செய்ததாக கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.