தேவதையே பொறாமை படும் அழகு.! நயன்தாராவின் புதிய போட்டோவை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!
Author: Rajesh29 January 2022, 3:56 pm
லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை நயன்தாரா தற்போது, இந்தியில் அட்லி இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார். நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் இப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் நடிகை நயன்தாரா தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். அவ்வப்போது தனது காதலரான விக்னேஷ் சிவனுடன் ஒரு சில படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், காத்துவாக்குல 2 காதல் படத்தின் டப்பிங் பணியிலும் நயன்தாரா ஈடுபட்டு வருகிறார்.
அதே சமயத்தில், தொழில் துறையில் முழு கவனம் செலுத்துவதற்காக, அடுத்த சில வருடங்களில், ஒரு சில படங்களில் மட்டும் நடித்து விட்டு, நடிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
துபாயில் 100 கோடிக்கு எண்ணெய் தொழில் தொடங்க உள்ளதாகவும், அதற்காக பலரிடமும் பல்வேறு தகவல்களை நயன்தாரா சேகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் விளம்பர பட ஒன்றில் எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் தேவதையே பொறாமை கொள்ளும் அழகு என வர்ணித்து வருகின்றனர்.
2
0