“எப்படிப்பட்ட நபரோடு, உடல் உறவு வைக்க வேண்டும் தெரியுமா ?” நிவேதா பெத்துராஜ் வெளிப்படையான பதிவு !
1 August 2020, 6:49 pmஇன்று சினிமாவில் பிஸியாக இருந்து வரும் நிவேதா பெத்துராஜ் 2015-ம் ஆண்டு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யாருடன் உடலுறவு வைக்க வேண்டும், எப்பேர்பட்ட நபருடன் உடலுறவு வைத்துக்கொள்ளவேண்டும் என்று பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில் கூறியுள்ளதாவது, “உங்களுடைய ஆத்ம உணர்வை யாருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். உங்களுடைய நெருக்கம் உங்களின் ஆரா-வையும், அவரது ஆரா-வையும் ஒன்றிணைய வைக்கும். உயிர்புலம் தான் AURA (ஆரா) என்கிறார்கள்.
நீங்கள் ஒருவருடன் எவ்வளவு நெருக்கமாக தொடர்பு கொள்கிறீர்களோ, அந்த அளவுக்கு அவர்களது ஆரா உங்களுடைய ஆராவுடன் கலக்கும்.
உதாரணத்திற்கு, பல பேருடன் உடல் உறவு கொண்டு பல ஆராக்களுடன் கலந்த ஒருவரது ஆரா எப்படி குழம்பி போயிருக்கும் என்று. அந்த குழப்பமான ஆரா நம்மளது நேர்மையான எண்ணங்களை தவிர்த்து விட்டு, எதிர்மறையான எண்ணங்களை ஈர்க்கும் படி அமைந்து விடும்.
அதனால், நீங்கள் விரும்பாத, அல்லது உங்களை விரும்பாத ஒருவருடன் உறவு கொள்ளுதலை தவிர்க்க வேண்டும்” என்று பதிவில் கூறப்பட்டுள்ளது.
0
0