அந்த மேட்டர் உங்க பையனுக்கு தெரியுமா..? ரம்யா பாண்டியன் ஓப்பன் டாக்..!

Author: Rajesh
25 April 2022, 10:00 am
Quick Share

ரம்யா பாண்டியன் 2016-ஆம் ஆண்டு ஜோக்கர் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகி நடித்துள்ளார். இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என தேசிய விருது பெற்றுள்ளது. மொட்டை மாடியில் எடுத்த ஒரு Photoshoot மூலமாக தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ளார். இவரது Hot Photos பார்த்து பல இயக்குனர்கள் இவரின் மேல் கண் வைத்து இருந்தார்கள். ஆனாலும் ஏன் வாய்ப்புகள் தட்டி போகிறது என்று தெரியவில்லை.

இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி, கலக்க போவது யாரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டார். இவர்மீது கலவையாக விமர்சனம் வந்தாலும் திரையுலகம் இவரை கைவிடவில்லை.

தற்போது அவருக்கு, சூர்யா தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது.  தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை போட்டு இளசுகளுக்கு விருந்து வைத்து வருகிறார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வை நிகழ்த்தினார். அதில், திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதில், ரம்யா பாண்டியன் போல பெண்ணை தான் தன் மகனுக்கு தேடுவதாக ஒருவர் குறிப்பிட, “இந்த மேட்டர் உங்க பையனுக்கு தெரியுமா?” என பதில் அளித்துள்ளார். மேலும், திருமண திட்டம் குறித்த கேள்விக்கு, “எனக்கானவரை நான் கண்டுபிடிக்கும் போது அவருக்கும் என்னை பிடிக்க வேண்டும், எனவே இப்போதைக்கு வாய்ப்பில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

Views: - 875

0

0