விஜய், தனுஷ்-யை குறிவைக்கும் நடிகை ராஷ்மிகா… தமிழ் மொழி படங்களில் கவனம் செலுத்த திட்டம்…

Author: Mari
29 December 2021, 4:58 pm
Quick Share

ரசிகர்களின் National Crush-க வலம் வருபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது இவர் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்துள்ள புஷ்பா படத்தில் இடம்பெறும் சாமி சாமி என்ற பாடலுக்கு ராஷ்மிகா ஆடியுள்ள நடனம் அனைவராலும் ரசிக்கப்பட்டு வைரலாகி வருகிறது.


அவர், தமிழில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து நடித்த சுல்தான் திரைப்படம் அவ்வளவாக வெற்றி பெறாமல் இருந்தாலும், ராஷ்மிகாவுக்கு தமிழகத்தில் ரசிகர்கள் நிறைய உள்ளனர். அதிலும் புஷ்பா படத்தில் தன் கவர்ச்சியின் மூலம் கிறங்கடித்த அவரை தற்போது, தமிழ் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். இதனால் அவர் தற்போது தமிழ் திரைப்படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்.


தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், தனுஷ் போன்ற நடிகர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கு இவர் பெரிதும் ஆர்வம் காட்டுகிறார்.

Rashmika -Updatenews360

எப்படியாவது சென்னையில் வீடு வாங்கும் திட்டத்திலும் இருக்கிறாராம் ராஷ்மிகா. தமிழ் திரைப்படங்களில் அதிக சம்பளம் கிடைக்கும் என்ற காரணத்தினால், அவர் தமிழ் படங்களில் நடிக்க ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Views: - 561

1

0