10 வருடங்களுக்கு பிறகு… பிரிந்த கணவருடன் சேர்ந்து வாழப்போகும் ரேவதி?

80ஸ்-களில் நடிகை ரேவதி இளைஞர்கள் மனதில் கனவுக்கன்னியாக இடம்பிடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகை ரேவதி. மண்வாசனை, தேவர் மகன், மௌனராகம், புதுமை பெண் என பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளிவந்த நவரசா ஆந்தாலஜி சீரிஸில் கூட முக்கியமான கதாபாத்திரத்தில் ரேவதி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தனது நடிகை ரேவதி நடிப்பால் அசத்தியிருக்கிறார். அப்போது தமிழ் சினிமாவில் ரேவதிக்கு அதிக மார்க்கெட் இருந்தது. ரேவதியின் சுட்டித்தனமான குணமும், அவரது சின்ன முகமும் தொடர்ந்து அவர் கதாநாயகியாக இருப்பதற்கான வாய்ப்புகளை அதிகரித்த சமயத்தில், மற்ற கதாநாயகிகளுக்கு வரும் படங்களும் கூட பிறகு ரேவதிக்கு கைமாறிய நிகழ்வுகளும் நடந்தன.

அந்த காலத்தில் இருந்த பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்து வந்த நடிகை ரேவதி. தன்னுடைய கலக்கலான திரைப்படங்களை கொடுத்து வந்த நிலையில், மலையாள இயக்குனரான சுரேஷ் சந்திர மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு, 2013 ஆம் ஆண்டு இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துப் பெற்றுக் கொண்டனர். ரேவதியை சுரேஷ் சந்திரமேனன் குழந்தை இல்லாததால் தான் விவாகரத்து செய்தாராம்.

இதனால் மனம் நொந்துபோன ரேவதி கணவரை பிரிந்த பின்னர் டெஸ்ட்டியூப் முறையில் தனது 50வது வயதில் பெண் குழந்தை பெற்றாராம். எந்த காரணத்துக்காக கணவர் விட்டு சென்றாரோ அதை நிரூபித்து காட்டும் வகையில் பெண் குழந்தையை பெற்று மகளுடன் தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் நடிகை ரேவதி. ஆனால் ரேவதி குழந்தை இல்லாததால் அவர் பல கேலி, கிண்டல்களால் மிகுந்த அம்மண உளைச்சலுக்கு ஆளாகினாராம்.

குழந்தை பிறந்து பிறகு அவர் முழு நேரமும் மகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். அதுமட்டும் அல்லாமல், சமூக நல உணர்வாளராகவும் தன்னை ரேவதி ஈடுபடுத்தி வருகிறார். இந்நிலையில் ரேவதியின் மாஜி கணவர் சுரேஷ் சந்திரமேனன் மீண்டும் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு தூது அனுப்பிக்கொண்டு இருக்கிறாராம்.

ரேவதியின் திரையுலக நண்பர்களும் கணவரோடு சேர்ந்து வாழ சொல்லி தங்களது கோரிக்கையை தெரிவித்து வருவதால் ரேவதி என்ன முடிவு எடுப்பார் என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது. வாழ்க்கையில் குழந்தையின்மையால் பலத்த போராட்டத்தை சந்தித்தவர், இறுதியில் டெஸ்ட் டியூப் பேபியை பெற்று நிம்மதியாக வாழ்ந்து வரும் நிலையில் மீண்டும் சுரேஷ் சந்திராவுடன் சேர்ந்து வாழ்வாரா என்பது கேள்வி குறியாக இருக்கிறது.

UpdateNews360 Rajesh

Recent Posts

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

10 minutes ago

ரயிலில் பயணம் செய்பவர்களே… அமலுக்கு வந்தது புதிய விதிமுறைகள் : முழு விபரம்!

ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…

59 minutes ago

சினிமாவுக்கு டாட்டா! எப்போவேணாலும் நடக்கலாம்? பேட்டியில் அதிர்ச்சியை கிளப்பிய அஜித்…

நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…

1 hour ago

ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே

பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…

2 hours ago

என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… பாக்., கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி சிறுவனை சித்ரவதை செய்த கும்பல்!

பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…

3 hours ago

என்னைய பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- தீடீரென கொந்தளித்த கயாது லோஹர்! என்னவா இருக்கும்?

கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…

3 hours ago

This website uses cookies.