கில்லி விஜய் போல் கபடி ஆடிய நடிகை ரோஜா – வைரல் வீடியோ ! நிலைகுலைந்த ரசிகர்கள் !

Author: Udhayakumar Raman
9 March 2021, 5:43 pm
Quick Share

செம்பருத்தி படம் வெளியானதும் அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி, பிரபுதேவா, சரத்குமார் இப்படி பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து, தமிழகத்தின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தார் நடிகை ரோஜா .

அடுத்து தெலுங்கு திரையுலகம் இவருக்கு Red Carpet விரித்தது. அப்படியே ஆந்திராவில் செட்டிலாகிவிட்டார். பிறகு செல்வமணியை திருமணம் செய்துகொண்டு சென்னையில் வாழ்ந்தார். இவர்களது காதல் தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்ட பெரும் கதையாகும்.

இந்நிலையில் அங்கேயே MLA ஆனார். அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் இவர் புகைப்படங்கள் Upload செய்வார். இந்நிலையில், நடிகை ரோஜா, எம்.எல்.ஏ.வாக இருக்கும் நகரி பகுதியில், நடந்த கபடி போட்டியை தொடங்கி வைக்க சென்றிருந்தார்.

அப்போது அவர் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை திடீரென்று களத்தில் இறங்கி வரும் ஆட ஆரம்பித்து விட்டார். இதை கண்டு அங்கு சுற்றியிருந்த மக்களும், கபடி வீரர்களும் உற்சாகத்தின் உச்சத்திற்கு சென்றார்கள்.

Views: - 216

41

10