விவாகரத்து போராளிகளுக்கு நாசுக்காக பதிலடி தந்த சமந்தா !

Author: Rajesh
22 September 2021, 11:26 am
Quick Share

மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்நிலையில், தற்போது சம்மு குட்டி விஜய்சேதுபதியுடன், “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

தற்போது நடிப்பிற்கு ப்ரேக் விடுவதாக அறிவித்தார் சமந்தா. இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது பெயரை S என மாற்றினார். நாகசைதன்யாவுடன் சமந்தா விவகாரத்து செய்ய போவதாக வதந்திகள் பரவின.

தனது மாமனாரான நாகர்ஜூனாவின் புதிய நிகழ்ச்சியின் Promo ஒன்றை ஷேர் செய்து சூப்பர் மாமா என்று இவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்

Views: - 373

0

0