தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா தற்போது பாலிவுட் படங்களில் கூட கவனம் செலுத்தி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். பவ்யமான தோற்றத்தோடு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமா உலகில் உச்சத்தை தொட்டவர் நடிகை சமந்தா.
சமந்தா சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.
தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சமந்தா மிகவும் மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனை நாகசைதன்யா எச்சரிக்க அவரை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்கு பின்னர் தொடர்ந்து இருவரும் நடித்து வருகிறார்கள்.
இதனிடையே, சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தார். நோய்த்தொற்றின் தாக்கத்தினால் உடல் ரீதியாக அவர் நாளுக்கு நாள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதாக அவ்வப்போது அவரே கூறியுள்ளார். தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த சமந்தா திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், மலேசியாவுக்கு ட்ரிப் சென்றுள்ள சமந்தா அங்கு குளத்தில் டூ பீஸ் உடையில், அரைநிர்வாண குளியல் போட்ட புகைப்படங்களை தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு இணையத்தையே அதிர வைத்தார். தற்போது, சினிமாவில் 14 வருடம் நிறைவு செய்திருக்கும் சமந்தாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதாவது, நடிகை சமந்தாவுக்கு மொத்தம் மூன்று வீடுகள் உள்ளது. ஹைதராபாத்தில் இருக்கும் சமந்தாவின் பிரம்மாண்ட வீட்டின் மதிப்பு மட்டும் 100 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. கதாநாயகியாக நடிக்க 7 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாகவும், ஹிந்தியில் உருவாகி வரும் வெப் தொடரில் நடிப்பதற்காக ரூபாய் 10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.
மேலும், விளம்பர படங்கள் மூலம் நடிகை சமந்தா 1.5 கோடி முதல் 2 கோடி வரை சம்பாதித்து வருகிறாராம். அதேபோல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா வெளியிடும் பதிவுகளுக்கு 20 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது என்கிறார்கள். Saaki எனும் ஆடை பிசினஸ் சொந்தமாக செய்து வருகிறார். மேலும் SustainKart நிறுவனத்தில் Angel Invester ஆக சமந்தா இருக்கிறார். இதுமட்டுமின்றி Nourish You India எனும் கம்பெனியில் ரூ. 16 கோடி வரை முதலீடு செய்துள்ளாராம். இதுபோக Jaguar XF – ரூ. 76 லட்சம், Porsche Cayenne – ரூ. 1.40 கோடி, BMW 7 Series – ரூ. 1.42 கோடி, Audi Q7 – ரூ. 94 லட்சம், I.R RR 3.0 vogue – ரூ. 2.26 கோடி, Benz G 63 AMG – ரூ. 2.55 கோடி என கூறப்படுகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.