தென்னிந்திய முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சமந்தா. அவ்வப்போது வடமாநில மொழிப் படங்களிலும் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் பிளாக்பஸ்டர் ஹிட்டான புஷ்பா படத்தில் ‘ஊ சொல்றீயா மாமா’ எனும் ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சி நடனமாடி ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வரும் சமந்தா Myositis என்னும் Autoimmune தன்னை தாக்கியுள்ளதாக தெரிவித்தார். இதற்காக அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதன் காரணமாக சில படங்களில் இருந்து விலகியதாகவும் கூறப்பட்டது. இருப்பினும், தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அண்மையில் வெளியான யசோதா படப்பிடிப்பின் போது சமந்தாவுக்கு காலில் பிரச்சினை ஏற்பட்டது. அந்த வலியோடு இந்த படத்திற்கான டப்பிங்கை சமந்தா பேசிய புகைப்படங்கள் வெளியானதையடுத்து அவரது அர்ப்பணிப்பை எல்லோரும் பாராட்டினர்.
இந்த சூழ்நிலையில், சமந்தா நடித்த ‘சகுந்தலம்’ படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்று வருவதோடு, பத்திரிகையாளர் சந்திப்பிலும் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில், அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, flash இல்லாமல் போட்டோ எடுக்குமாறு புகைப்படக் கலைஞர்களை அவர் கேட்டுக்கொண்டார். ஆனால், அதனை கேட்டகாமல் சமந்தாவை வளைத்து வளைத்து போட்டோ எடுத்தனர். இதனால் தனது கண்களை கையில் வைத்து மறைத்து சமந்தா சமாளித்துக்கொண்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, ‘மயோசிடிஸ் நோய் பாதிப்பின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும், எலும்புகள் பலவீனமாகி சோர்ந்துவிட்டதாகவும் பேட்டி ஒன்றில் சமந்தா பேசியுள்ளார். சில நாட்களில் படுக்கையில் இருந்து கூட எழுந்து செல்வதற்கு சிரமமாக இருந்ததாகவும், நான் வேடிக்கைக்காகவும் ஸ்டைலுக்காகவும் கண்ணாடி அணிவதில்லை எனக் கூறிய அவர், வெளிச்சம் உண்மையில் என் கண்களைப் பாதிப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சமந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருவதுடன், அவருக்கு சிம்பத்தி ஸ்டார் சமந்தா என்றும் பட்டத்தையும் கொடுத்துள்ளனர். அதாவது, இந்த வாரம் முழுவதும் உங்கள் அன்பில் இந்த படத்தை விளம்பரப்படுத்த ஆவலாக இருந்ததாகவும், ஆனால், தொடர்ந்து இருந்த வேலைகளாலும் தற்போது எனக்கு இருக்கும் காய்ச்சல் காரணமாகவும் என்னுடைய குரலும் போய்விட்டதாக குறிப்பிட்டிருந்தார். எனவே சகுந்தலம் குழுவுடன் நீங்கள் அனைவரும் பங்குகொள்ளும் எனக் கூறியிருந்தார்.
சமந்தாவின் இந்த பதிவை பார்த்து ரசிகர்கள் ஆறுதல் கூறினாலும், சிலரோ, ஒவ்வொரு முறை படம் ரிலீஸ் ஆகும் போது, இதுபோன்று தனக்கு பிரச்சனை என்று கூறி சிம்பத்தியை சமந்தா உருவாக்க முயற்சிப்பதாக விமர்சிக்கின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.