கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான தெலுங்கில் Ye Maaya Chesave மற்றும் தமிழில் விண்ணைதாண்டி வருவாயா திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சமந்தா. இதற்கு முன்னர், கல்லூரி படிப்பை முடித்தவுடன் மாடலிங் மற்றும் சில முக்கிய விளம்பரங்களிலும் நடித்து வந்தார். 2010ம் ஆண்டு, அதர்வா ஜோடியாக பானா காத்தாடி திரைப்படத்தில் நடித்த இவர், இதன் பின்னர், நிறைய தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதன் மூலம், அடுத்தடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்று, தென்னிந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றார். கடைசியாக தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து இருந்தார். மையோசிட்டிஸ் என்ற நோயால் அவதிப்பட்டு வரும் சமந்தா, தற்போது அதற்கு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். சிகிச்சையின் மூலம் அவரது உடல்நிலை தற்போது தேறி வருவதாக கூறப்படுகிறது. தெலுங்கில் ‘ஷகுந்தலம்’, ‘குஷி’ படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா & சமந்தா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘குஷி’. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் கடந்த ஆண்டு வெளியிட்டனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த படத்தின் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் குஷி படம் குறித்த ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதில், “குஷி படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும். விஜய் தேவரகொண்டா ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என சமந்தா கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்த விஜய் தேவரகொண்டா, “நாங்கள் எல்லோரும் நீங்கள் பரிபூரண குணமடைந்து படப்பிடிப்புக்கு வர காத்திருக்கிறோம். உங்கள் பெரிய சிரிப்பை காண ஆவலாக காத்திருக்கிறோம்” என பதில் ட்வீட் செய்துள்ளார். இதற்கு சமந்தா நன்றி தெரிவித்துள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.