“மஞ்சள் மாங்கனி” போல தேகம் மின்னும் புகைப்படத்தை வெளியிட்ட சஞ்சிதா ஷெட்டி

20 January 2021, 7:36 pm
Quick Share

சூது கவ்வும் படத்தில் விஜய்சேதுபதியின் கற்பனை காதலியாக வந்து எல்லோரையும் அசர வைத்தவர் சஞ்சிதா ஷெட்டி. படத்தில் யாரும் ஹீரோயின் இல்லாத நிலையில் இவரது கதாபாத்திரம் அந்த இடத்தை நிரப்புவது போல் இருந்தது.

2006 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான முங்காரு மலே என்ற படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார் சஞ்சிதா ஷெட்டி. ஹீரோயினாக நடிக்காவிட்டாலும் நிறைய படங்களில் துணை நடிகை கதாபாத்திரத்தில் நடித்தார்.

தில்லாலங்கடி, கொள்ளைக்காரன், பீட்சா 2, எங்கிட்ட மோதாதே, ரம் என பல படங்களில் நடித்தார். இடையில் சுசி லீக்ஸ் என்று பாடகி சுசித்ரா வெளியிட்ட சர்ச்சையான வீடியோக்களில் இவரது வீடியோ இருந்ததாக பல வீடியோக்கள் பரவியது.

ஆனால் அதை நம்பி முடங்காமல் தொடர்ந்து பல பட வாய்ப்புகளை தேடி வந்தார் சஞ்சிதா. தற்போது சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடிவரும் இவர் அவ்வபோது கவர்ச்சியும் காட்டி வருகிறார்.

இப்போது ஒரு புகைப்படத்தில் மஞ்சள் நிற traditional look இல் போஸ் கொடுத்திருக்கும் இவரை பார்த்து நெட்டிசன்கள் மஞ்சள் மாங்கனி என் வர்ணித்து வருகின்றனர்.

Views: - 15

0

0