சரண்யா பொன்வண்ணன் மகளின் திருமணம் ! முதல்வர் ஸ்டாலின் நேரில் வந்து வாழ்த்து !

6 July 2021, 9:40 am
Quick Share

ISO முத்திரை பதித்த அழகான அம்மா நடிகை என்றால் அது சரண்யா பொன்வண்ணன் தான். தென்னகத்து மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கிலும் எல்லோருக்கும் அம்மாவாக நடித்துவிட்டு தற்போது சிறிது ஓய்வில் உள்ளார்.

சரண்யாவின் கணவர் ஆன பொன்வண்ணன் சரண்யாவின் விஷயங்களில் அதிகம் தலையிட மாட்டார் என சரண்யா ஒரு முறை சொன்னது நினைவிற்கு வருகிறது. அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருப்பாராம்.

அதே சமயம் இரு குழந்தைகள் மீது அலாதியான பாசம் உண்டு என சரண்யா அதே பேட்டியில் சொல்லி இருக்கிறார். அழகான இரண்டு மகள்கள் பிரியாதர்ஷினி, சாந்தினி இருவரும் இன்று மருத்துவத்துறையில் பயின்று வந்தார்கள்.

சினிமாவிற்காகவே சரண்யாவும், சரண்யாவின் கணவரும் பல்வேறு வகையான உதவிகள் செய்திருக்கிறார்கள். இந்த நிலையில் நேற்று, நடிகை சரண்யா பொன்வண்ணன் மூத்த மகளான பிரியதர்ஷினி பொன்வண்ணனுக்கு திருமண வரவேற்பு நடந்தது.

அதில் தமிழக முதல்வரான ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தோடு நேரில் வந்து வாழ்த்தினார்கள். மேலும் சரண்யா மற்றும் பொன்வண்ணனின் நண்பர்கள், நடிகைகள், நடிகர்கள் சிலர் கலந்துகொண்டார்கள். இதன் புகைப்படங்கள் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.

Views: - 251

4

1