கண்ணடித்து ரசிகர்களை காதலில் விழவைக்கும் மன்மத லீலை நடிகை ஸ்ம்ருதி வெங்கட்!!

Author: kavin kumar
11 February 2022, 3:27 pm
Smruthi Venkat
Quick Share

நடிகை ஸ்ம்ருதி வெங்கட் ( Smruthi Venkat ) தமிழ் திரைப்பட நடிகை . இவர் தனது சினிமா பயணத்தை ” இன்று நேற்று நாளை ” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் துடங்கினார் . அதை தொடர்ந்து இவர் நடிகர் அருண் விஜய்நடித்த தடம் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக அருண்விஜய்க்கு ஜோடியாக நடித்து மக்கள் மனதை கவர்ந்தார். என்னை அறிந்தால் படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்த அருண் விஜய் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் தடம் என்பது குறிப்பிடத்தக்கது .

ஸ்ம்ருதி வெங்கட் தடம் படத்தை தொடர்ந்து பாலாஜி இயக்கத்தில் “மூக்குத்தி அம்மன்” படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்தார். ஆர் ஜே பாலாஜி ஹீரோவாகவும் அவரின் மூன்று தங்கைகளில் ஒருவராகவும் ஸ்ம்ருதி வெங்கட் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

கடந்த வருடம் வெளியான வனம் ,தீர்ப்புகள் விற்கப்படும் ஆகிய இரண்டு படங்களில் நடித்திருந்தார். ஆனால் மக்கள் மத்தியில் இந்த படங்கள் பெரிதாக சென்றடையவில்லை . தற்போது ம்ருதி வெங்கட் பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் “மாறன்” படத்தில் முக்கிய வேடத்தில் இவர் நடித்து வருகிறார். அதேசமயம் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக “குற்றமே குற்றம்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.இவற்றை தொடர்ந்து மன்மத லீலை படத்திலும் நடித்து வருகிறார் .

நடிகை ஸ்ம்ருதி வெங்கட் பார்ப்பதற்கு பக்கத்துக்கு வீட்டு பெண் போல இருப்பவர் . அதிக மேக்கப் இல்லாமல் பார்ப்பதற்கு ரொம்ப கியூட் ஆகா இருக்கும் நடிகை . இவர் இதுவரை எந்த கவர்ச்சி படங்களிலும் நடித்தது இல்லை . இவர் இன்றுவரை நல்ல கதாபாத்திரம் கொண்ட படங்களையே தேவுசெய்து நடித்து வருகிறார் . இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கியூட்டாக கண்ணடித்த புகைப்படத்தை ஷேர் செய்து ரசிகர் கூட்டத்தை அதிகரித்து வருகிறார் .

Views: - 3128

1

0