என் நடத்தையை பத்தி பேசி.. உணர்ச்சி வசப்பட்ட நடிகை சினேகா..!

2000ம் காலகட்டத்தில் ஓஹோஹோன்னு புகழ் பாராட்டப்பட்ட நடிகையாக சினேகா தென்னிந்திய சினிமாவில் வலம் வந்தார். 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள் உருவாகினர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது.

இந்த கோலிவுட்டில் பல தம்பதிகள், பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தையும் பிறந்து வளர்ந்துவிட்டது.

இந்நிலையில், சமீபத்தில் எடுத்த பேட்டி ஒன்றில், உங்களின் உண்மையான பெயர் சுகாசினி சினேகா என்ற பெயரில் வலம் வந்ததால் சாதாரண பெண் சுகாசினி சினேகாவை பற்றி வெளியாகும் கிசுகிசுக்கள் உங்களுக்கு ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தியதா அதை எப்படி எதிர் கொண்டீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த சினேகா என்னை பற்றி பல கிசுகிசுகள் வந்துவிட்டது. இனிமேல் என்னை பற்றி இப்படித்தான் எழுதவேண்டும் என்று யோசித்தால் தான் முடியும். அந்த அளவிற்கு என்னை பற்றி ஒற்றை கிசுகிசுக்கள் வந்தது. ஆனால், ஆரம்பத்தில் என்னை கடுமையாக அவை பாதித்தன.

என் தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா வாழ்க்கை, எதிர்கால வாழ்க்கை என்று எல்லாவற்றையும் பாதித்தது. ஒரு அறைக்குள் அமர்ந்து கொண்டு என்னைப் பற்றி தெரியாமல் பத்திரிகையில் ஒரு பக்கத்தை நிரப்பவும் சுவாரசியமாக வேண்டும் என்ற காரணத்திற்காக ஒரு தனிப்பட்ட நபரை நடிகை என்ற ஒரே காரணத்தினால் எந்த ஆதாரமும் இல்லாமல் ரசிகர்கள் புரிந்து கொள்ளும் வகையில் எழுதுகிறார்கள்.

இது பற்றி ஒரு பத்திரிக்கையாளரை உங்கள் அலுவலகத்தில் இருக்கும் ஒரு பெண்ணோடு தொடர்பு படுத்தி நான் கிசுகிசு எழுதி உங்கள் மனைவிக்கும் உங்கள் குழந்தைக்கும் அதை கொடுத்தால் உங்களுக்கு எப்படி இருக்கும் என்று கேள்வியை கேட்டேன். அதற்கு அவர் பதில் சொல்லவே இல்லை. ஆரம்பகாலத்தில் இப்படியான பிரச்சினை எதிர்கொண்டு போக போக நான் கண்டுகொள்ளாமல் வேலையில் பிஸியாகிவிட்டேன் என்று நடிகை சினேகா கூறியிருந்தார்.

இதனிடையே, கருத்து வேறுபாடு விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் வெளியானது. ஆனால், அதற்கு எந்தவித பதிலும் சொல்லாமல் பிரசன்னாவுடன் ரொமான்ஸ் செய்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அனைத்திற்கும் நடிகை சினேகா முற்றுப்புள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

சினிமாவிற்குள் நுழையும் மோகலாலின் இரண்டாவது வாரிசு? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

மோகான்லாலின் வாரிசுகள்? மோகன்லால்-சுசித்ரா தம்பதியினருக்கு பிரணவ் என்ற மகனும் விஸ்மயா என்ற மகளும் உள்ளனர். இதில் பிரணவ் சிறு வயதில்…

5 hours ago

சிசிடிவி வெளியானதால் கொலை செய்த விசிக நிர்வாகி? பெட்ரோல் பங்க் உரிமையாளர் கொலை வழக்கில் திருப்பம்…

கிழக்கு கடற்கரைச் சாலையில் கூவத்தூர் அருகே உள்ள பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருக்கு வயது 42. இவர் காத்தாங்கடை…

6 hours ago

என்னோட பாடலை ஹாலிவுட்டில் காப்பியடிச்சிட்டாங்க- கடுப்பில் தேவி ஸ்ரீ பிரசாத்!

தெலுங்கு சினிமாவின் ராக்ஸ்டார் தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தேவி ஸ்ரீ பிரசாத் தமிழில் பல திரைப்படங்களுக்கு…

7 hours ago

அஜித்குமார் வழக்கில் திடீர் திருப்பம்? நிகிதா மீது மோசடி புகார்! தூசிதட்டப்பட்ட பழைய File…

திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு தனது தாயாருடன் சென்ற நிகிதா என்ற பெண்மணி அக்கோயிலில் உள்ள காவலாளி அஜித்குமாரிடம் தனது…

8 hours ago

நாங்க இருக்கோம்; தைரியமாக இருங்கள்- அஜித்குமாரின் குடும்பத்திற்கு எடப்பாடி பழனிசாமி தொலைப்பேசியில் ஆறுதல்

திருட்டு வழக்கு தொடர்பாக திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலின் தற்காலிக காவலாளியான இளைஞர் அஜித்குமாரை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்ற…

9 hours ago

என்னால ஐநூறு ஆயிரத்துக்குலாம் நடிக்க முடியாது- இன்ஸ்டா பிரபலம் திவாகர் ஆதங்கம்!

சூர்யா ரீல்ஸால் பிரபலமான திவாகர் கடந்த ஆண்டு இன்ஸ்டாவில் கஜினி சூர்யா போல் ரீல்ஸ் செய்து இன்ஸ்டா உலகத்தில் பிரபலமானவர்…

10 hours ago

This website uses cookies.