காதலால் பட்ட அவஸ்தை.. 3 முறை கருக்கலைப்பு.. ஸ்ரீவித்யாவுக்கு வில்லனே அவர்தான்; உண்மையை வெளியிட்ட அண்ணி..!

தான் இறந்துவிடுவோம் என தெரிந்தும் கமல்ஹாசனை துரத்தி காதலித்த பிரபல நடிகை மரணப் படுக்கையில் கமலை மட்டும் சந்தித்துள்ளார்.

கமல்ஹாசனும் ஸ்ரீவித்யாவும் இணைந்து நடித்த முதல் திரைப்படம் ” சொல்லத்தான் நினைக்கிறேன்”. 1973ல் இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான செல்லுலாய்டில் பூத்த கிளாசிக் காதல்.

அதன் பின் 1975ல் அபூர்வ ராகங்கள் திரைப்படம் கமல்- ஸ்ரீவித்யாவின் நட்பை உறுதிசெய்த திரைப்படம். இருவருக்குமான ஜோடி திரைப்படத்தில் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.

இருவரும் அப்போது முதலே நல்ல நட்பாகி பழகி வந்துள்ளனர். இதில் ஒரு தலை காதலாக மாறியது ஸ்ரீவித்யாவுக்கு. ஆனால் வாணியுடன் கமலுக்கு திருமணம் நடைபெறுகிறது.

அதன்பின் எட்டு வருடங்கள் கழித்து 1986 ல் புன்னகை மன்னன் படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தில் பத்மினியாக வரும் ஸ்ரீவித்யா, சாப்ளின் செல்லப்பாவாக வரும் கமல்ஹாசனுடன் நட்பையும் நடிப்பையும் மீண்டும் உறுதிசெய்கிறார்.

தொடர்ந்து 1989 ல் அபூர்வ சகோதரர்கள், இந்திரன் சந்திரன், நம்மவர், கடைசியாக காதலா காதலா என்று அவருக்கும் கமலுக்குமான படங்கள் இருக்கின்றன.

தொடர்ந்து சில படங்கள், மீண்டும் கேரளாவிற்கே திரும்புகிறார் ஸ்ரீவித்யா. நோயால் அவதிப்படும் ஸ்ரீவித்யாவின் கடைசி நாட்களில் மிகவும் கஷ்டப்பட்டார்.

கடைசி காலத்தில் மரண படுக்கையில் இருந்த ஸ்ரீவித்யா, தான் கமலை மட்டும் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். அவரது கடைசி ஆசையை கமல் நிறைவேற்றியுள்ளார்.

ஸ்ரீவித்யா தனது சொத்துக்களை ஏழை எளிய குழந்தைகளுக்கு எழுதி வைத்துள்ளார். மேலும் இவர் மறைந்த பழம்பெரும் பின்னணி பாடகி எம்எல் வசந்தகுமாரியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஸ்ரீவித்யாவின் அண்ணி அவரைப் பற்றிய ஒரு சில விஷயங்களை தற்போது, இணையதளத்தில் பேட்டி வாயிலாக தெரிவித்து வருகிறார். அதாவது, ஸ்ரீவித்யா தனது பெற்றோர்களை எதிர்த்து ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டாராம். ஆனால், அவரும் ஸ்ரீவித்யாவை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என அவருக்கு விருப்பம் இல்லை என்றாலும் நடிக்க கட்டாயப்படுத்தி இருக்கிறார். மேலும், திருமணத்திற்கு பின் படங்களில் நடித்தாராம். இதோடு மூன்று முறை தனது கணவரால் கருக்கலைப்பு செய்து கொண்டுள்ளதாக ஸ்ரீவித்யாவின் அண்ணி தற்போது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

28 minutes ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

1 hour ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

2 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

2 hours ago

எங்க கூட்டணிக்கு விஜய் வந்தால் சிவப்பு கம்பளம் தயார்… பாஜக பகிரங்க அறிவிப்பு!

நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…

3 hours ago

எங்கடா தாவுறது? நானே தவழ்ந்துட்டு இருக்கேன்- ரெண்டாவது நாளிலேயே புஸ்ஸுன்னு போன ரெட்ரோ?

கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…

4 hours ago

This website uses cookies.