சேலை கட்டி அலுத்து போச்சு….. ஒரு சேஞ்சுக்கு அந்த டிரஸ்…. சீரியல் நடிகை சுஜிதா !!

Author: kavin kumar
15 August 2022, 8:34 pm
sujitha -updatenews360-1
Quick Share

சுஜிதா ஒரு வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார் . இவர் தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ” பாண்டியன் ஸ்டோர்ஸ் ” என்ற பிரபலமான தொடரில் நடித்து வருகிறார்.

சிறு வயதிலிருந்தே சினிமாவிலயும் சீரியல் தொடர்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார் .இவர், ரஜினி, அஜித் மாதவன், மம்மூட்டி, மோகன்லால், நாகார்ஜுனா அக்கினேனி, நந்தமுரி பாலகிருஷ்ணா போன்ற பிரபல நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘ஒரு பெண்ணின் கதை’ நாடகம் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான சுஜிதா, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 30-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் மனிதன், சத்தியராஜ் நடித்த பூவிழி வாசலிலே, வாலி, இருவர், தியா, பள்ளிக்கூடம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருக்கிறார் சுஜிதா. சுஜிதா தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை உள்ளது.

நடிகை சுஜிதா தற்போது சீரியல்களில் நடிப்பதுமட்டுமில்லாமல் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை அப்லோட் செய்யும் இவர், தற்போது நீல நிற மாடர்ன் உடையில் கியூட் போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Views: - 351

2

0