திருமணமான ஒரே ஆண்டில் விவாகரத்து.. 20 ஆண்டு ரகசியத்தை வெளிப்படையாக பேசிய சுகன்யா..!

Author: Vignesh
18 மே 2023, 10:45 காலை
suganya-updatenews360
Quick Share

பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து 90களில் முன்னணி பிரபல நடிகையாக சுகன்யா வலம் வந்தவர்.

நடிகை சுகன்யா 1992 -ம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் நெப்போலியன் நடிப்பில் வெளியான “புது நெல்லு புது நாத்து” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

suganya-updatenews360

இவர் தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழி படங்களில் நடித்துள்ளார். நடிகை சுகன்யா ஸ்ரீதர் ராஜகோபாலன் என்பவரை 2002 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் வாழ்க்கை சில ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்தது.

suganya-updatenews360

இதனிடையே, திருமணத்திற்கு பின் சுகன்யா ஒரு சில தொலைக்காட்சித் தொடர்களில் நடிகை சுகன்யா நடித்துள்ளார். ஆனால், கணவருக்கோ சுகன்யா நடிப்பது பிடிக்கவில்லை என்பதால், திரைப்படம் மற்றும் டிவியில் நடிக்கக்கூடாது என்று அடுக்கடுக்கான கட்டுப்பாடுகளை போட்டது மட்டும் இல்லாமல், எக்குத்தப்பான சில கேள்விகளையும் கேட்டுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சுகன்யா அவரை விவாகரத்து செய்துள்ளார்.

suganya-updatenews360

இந்த கசப்பான நிகழ்வுகளுக்கு பிறகு நடிகை சுகன்யா இரண்டாவது திருமணத்தை பற்றி யோசிக்காமல் தனியாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இதுகுறித்து அண்மையில் சுகன்யா அளித்த பேட்டியில், பெண்கள் எதற்கும் பயந்து ஓடத்தேவையில்லை எனவும், கணவர் மனைவி இருவரும் கலந்து பேசி பின் விவாகரத்து செய்யலாம் என்றும், அப்படியில்லை என்றால் நீதிமன்றம் சென்றும் விவாகரத்து பெற்றுக்கொள்ளலாம் எனவும், விவாகரத்து பெற தயக்கப்பட்டால் கொடுமையான காலங்களை குடும்பவாழ்க்கையில் எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும் எனவும், பிடிக்காத திருமணத்திற்கு விவாகரத்து செய்ய பயப்பட வேண்டாம் என்றும், அதெல்லாம் கடந்து தான் பெண்கள் வரவேண்டும் என்று நடிகை சுகன்யா தெரிவித்துள்ளார்.

suganya-updatenews360

இதற்கிடையில் சுகன்யா ஒரு அரசியல் வாதியின் கட்டுப்பாட்டில் இருந்ததால் சினிமாவில் தொடர்ந்து நடிக்கமுடியாமல் போனதாகவும் அவரால் வாழ்க்கை பாதி நாசமாகிவிட்டதாகவும் பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Centipedes திருப்பதி கோவில் அன்னதான உணவில் பூரான்.. லட்டை தொடர்ந்து அடுத்த சர்ச்சையால் பக்தர்கள் கொந்தளிப்பு!
  • Views: - 895

    2

    1