“இப்பவே பார்த்துக்கோங்க கொஞ்ச நேரத்தில DELETE பண்ணிடுவேன்..” – பதற வைத்த சுனைனா !

Author: Udayachandran RadhaKrishnan
21 September 2021, 11:22 am
Sunaina - Updatenews360
Quick Share

‘நாக்க மூக்க’, ‘உனக்கென நான் எனக்கென நீ’ போன்ற பாடல்களை ரசிகர்கள் அத்தனை எளிதில் மறக்க முடியாது. பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்த பாடல்கள் அவை. காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் தான் நடிகை சுனைனா அறிமுகமானார். படத்தில் அவருக்கும், ஹீரோ நகுலுக்கும் இடையில் இருந்த கெமிஸ்ட்ரி பெரிதும் ரசிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் காதலிக்கவும் செய்தார்கள். பிறகு, மீண்டும் சேர்ந்து மாசிலாமணி படத்தில் நடித்தனர்.

Sun Pictures புண்ணியத்தில் அந்த படம் சுமாராக ஓடியது. ஆனால் அந்த படங்களை அடுத்து சுனைனாவும், நகுலும் இணைந்து நடிக்கவில்லை. சுனைனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சில்லு கருப்பட்டி திரைப்படம் கடந்த 2019 வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. எப்பவாவது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை அப்லோட் செய்யும் இவர், தற்பொழுது நடிகை சுனைனா ராணி மாதிரி மேக்கப் போட்டுக்கொண்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். மேலும் இதற்கு Caption ஆக, “இப்பவே பார்த்துக்க கொஞ்ச நேரத்துல டெலீட் பண்ணிடுவேன்..” என்று பதிவிட்டுள்ளார்.

Views: - 482

7

0