தளபதி67 படத்தில் த்ரிஷாவின் ரோல் இதுதானா..? இணையத்தில் லீக்கான தகவல்..!

Author: Rajesh
2 February 2023, 10:37 am
Thalapathy67Trisha_Updatenews360
Quick Share

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றி திரைப்படங்களின் மூலம் தென்னிந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணையும் திரைப்படம் தளபதி67. இப்படத்திற்கு கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார்.

vijay Lokesh -Updatenews360

தளபதி 67 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. அதன்படி இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இதுதவிர ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சாவும், படத்தொகுப்பு பணிகளை பிலோமின் ராஜ் மேற்கொள்ள உள்ளதாகவும் அறிவித்தனர். அதோடு ஸ்டண்ட் மாஸ்டராக அன்பறிவு பணியாற்றுகின்றனர். நடன இயக்குனராக தினேஷ் இணைந்துள்ளார் என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.

Trishakrishnan_Updatenews360

ஏற்கனவே இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை சென்னை மற்றும் மூணாறில் நடத்தி முடித்தனர். இந்நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு காஷ்மீர் சென்றுள்ளது. திரிஷா, பிரியா ஆனந்த், சத்யராஜ், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஸ்கின், கௌதம் மேனன், சஞ்சய் தத் என நட்சத்திர பட்டாளங்கள் சேர்ந்து இப்படம் உருவாகி வருகிறது.

Trishakrishnan_Updatenews360

இப்படத்தின் மூலம் 14 வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் த்ரிஷா சேர்ந்து நடிக்கவிருக்கிறார். இந்த கூட்டணியை திரையில் காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்நிலையில், இப்படத்தில் த்ரிஷாவின் கேரக்டர் குறித்து இணையத்தில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் த்ரிஷா விஜய்யின் மனைவியாக நடிப்பதாகவும், பிளாஷ்பேக் போர்ஷனில் தான் த்ரிஷா வருவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 531

8

2