சரித்திர கதையில் திரிஷா… ஸ்பெஷல் பயிற்சியில் மும்முரம் – கவனத்தை ஈர்க்கும் புகைப்படம் இதோ!

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை வென்று நடிகையாக களமிறங்கிய திரிஷா முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். ஜோடி படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்த திரிஷா மௌனம் பேசியதே, சாமி, லேசா லேசா, கில்லி, ஆறு, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது 40 வயதாகும் திரிஷா இன்னும் அதே அழகியோடு பொம்மை போன்றே இருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்து அவரின் அழகை பார்த்து மயங்கிய நடிகர்கள் பலர் அவரை காதலித்துள்ளனர். ஆனால் திரிஷாவோ சிம்பு மற்றும் ராணாவை காதலித்து பின்னர் பிரிந்துவிட்டார்.

இதனிடையே வீட்டில் பார்த்த மாப்பிள்ளை வருண் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று பின்னர் நின்றுபோனது. இதனால் திருமண வாழ்க்கையே இப்போதைக்கு வேண்டாம் என ஒதுக்கி வைத்துவிட்டு தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.

பல வருடங்களுக்கு பின்னர் 96 திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதைடுத்து வாய்ப்புகள் குவியத்துவங்க தொடர்ச்சியாக நடித்து வருகிறார். கடைசியாக விஜய் உடன் லியோ திரைப்படத்தில் நடித்தார். அடுத்ததாக நடிகர் அஜித்திற்கு ஜோடியாக விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே தெலுங்கு திரைப்படம் ஒன்றிலும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக கமிட் ஆகியுள்ளார்.

சரித்திர திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்தில் திரிஷா வீர பெண்மணியாக, பயங்கரமான ஆக்ஷன் ரோலில் நடிக்க உள்ளாராம். இதற்காக அவர் குதிரையேற்றம், களரி சண்டை உள்ளிட்ட பயிற்சியில் மும்முரமாக இறங்கியுள்ளார். சுமார் 18 வருடங்களுக்கு பின்னர் சிரஞ்சீவியுடன் நடிப்பதால் இப்படம் சிறப்பாக வரவேண்டும் என திரிஷா மும்முரம் காட்டி வருகிறாராம்.

UpdateNews360 Rajesh

Recent Posts

தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?

தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…

4 hours ago

வெற்றிமாறன் படத்தில் இயக்குனர் நெல்சன் இடம்பெற்றதன் பின்னணி இதுதான்? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…

4 hours ago

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

5 hours ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

6 hours ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

6 hours ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

6 hours ago

This website uses cookies.