“இவ்ளோ நாளா இந்த உடம்ப எங்க மறைச்சு வெச்சுருந்திங்க” வரலக்ஷ்மியை வர்ணிக்கும் ரசிகர்கள்..!

Author: Rajesh
23 August 2022, 12:00 pm
Quick Share

வரலட்சுமி சரத்குமார் தமிழில் 2012-ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான ” போடா போடி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அறிமுக மான முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் நடிகை வரலட்சுமி சரத்குமார் . தமிழ் அல்லாது மலையாளம் , கன்னடம் , தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழில் நல்ல கதை கொண்ட படங்களிலும் சவாலான கதாபாத்திரங்களில் நடிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தமிழில் ஒரு சில நடிகைகளே நல்ல கதை கொண்ட படங்களை தேர்வு செய்து நடிக்கின்றனர் . அதில் நடிகை வரலட்சுமி சரத்குமார் ஒருவர் . இதன் காரணமாகவே இவர் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளார் .

வரலட்சுமி சரத்குமார் நடித்த படங்களிலேயே ‘தாரை தப்பட்டை’ ,’சண்டக்கோழி 2 ‘ , ‘சர்கார் ‘,’விக்ரம் வேதா ‘ ஆகிய படங்கள் மக்களை பெரிதும் கவர்ந்த படங்களாகும். பாலாவின் “தாரை தப்பட்டை” படத்தில் இவருடைய நடிப்பை பார்த்த சினிமா ரசிகர்கள் இவருக்கு தேசியவிருது கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக பலரும் தெரிவித்தனர்.

சர்க்கார் படத்திற்கு பிறகு உடல் எடை கூடி குண்டாகி போன இவர் தற்போது கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல் எடை இளைத்து ஒல்லியாக மாறியுள்ளார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் உடற்பயிற்சி , யோகா செய்யும் நடிகை வரலட்சுமி சரத்குமார் தற்போது தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார் .  
அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் வேற லெவலில் உருமாற்றம் பெற்று ஒல்லிபெல்லியாக இருக்கிறார் வரலட்சுமி. அந்த வீடியோவுடன். ‘போராட்டம் உண்மையானது.. சவால் உண்மையானது.. ஆனால் நீங்கள் விரும்பியதை அடைவதை எதுவும் தடுக்க முடியாது..நீங்கள் யார்.. அல்லது நீங்கள் என்னவாக இருக்க வேண்டும் என்று யாராலும் சொல்ல முடியாது.. உங்களை நீங்களே சவால் விடுங்கள்.. உங்களை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள். போட்டி.. மற்றும் நீங்கள் அடையக்கூடிய தொகையால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.. 4 மாத கடின உழைப்பு, இதற்கு நான் காட்ட வேண்டியது இதுதான்.. உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதைச் செய்யுங்கள்.. மற்றவர்களை மகிழ்விக்க எதையும் செய்யாதீர்கள். உன்னால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்று யாரும் சொல்ல வேண்டாம்.!!! நம்பிக்கை ஒன்றே உனது ஆயுதம்..!! என எழுதியுள்ளார்.

Views: - 736

26

5