“நான் உயிரோட இருக்குறதுக்கு வருத்தபடுறேன்” – தோழி மரணம் குறித்து பேசிய யாஷிகா !

Author: Aarthi Sivakumar
3 August 2021, 10:09 am
Quick Share

தமிழில் ஜீவா ஹீரோவாக நடித்து 2016-ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘கவலை வேண்டாம்’. இதில் கெஸ்ட் ரோலில் நடிகை யாஷிகா ஆனந்த் நடித்திருந்தார். இது தான் இவர் அறிமுகமான முதல் படமாம். இதனைத் தொடர்ந்து ரகுமானின் ‘துருவங்கள் 16’, கெளதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.

இந்தநிலையில் ஒரு வாரத்துக்கு முன் அதிகாலையில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் நண்பர்களுடன் சென்ற யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் படுகாயமடைந்தார், அவருடன் காரில் சென்ற அவரது தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, தற்போது உடல்நலம் கொஞ்சம் தெரிய நிலையில், தோழியின் மரணம் குறித்து முதன் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

“நான் உயிரோடு இருப்பதற்கு வேதனைப்படுகிறேன், தோழி பவானி என் மரணத்திற்கு நான் காரணமாக இருப்பேன் என்று நினைத்து பார்த்ததே இல்லை… வாழ்நாள் முழுவதும் இந்த குற்ற உணர்ச்சியோடு இருப்பேன், உனக்கும் உன் குடும்பத்துக்கும் இப்படி ஒரு இழப்பை நான் தந்ததற்கு என்னை மன்னிச்சுடு. நாளை எனது பிறந்தநாளை நானும் கொண்டாட மாட்டேன், ரசிகர்களாகிய நீங்களும் கொண்டாடாதீர்கள்.” என்று உருக்கமாக பேசியுள்ளார்.

Views: - 353

3

0