யாஷிகா ஆனந்த் தமிழ் திரைப்பட நடிகை மற்றும் விளம்பர மாடல் அழகியும் ஆவார். இவர் தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான “கவலை வேண்டாம்” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திர வேடத்தில் நடித்திருந்தார்.
அதன் பின் தமிழில் தொடர்ந்து படங்களில் நடிக்க துடங்கிய நடிகை யாஷிகா வயசுக்கு மீறிய கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார் .தமிழில் “துருவங்கள் பதினாறு” , ” பாடம் ” , “இருட்டு அறையில் முரட்டு குத்து” , “நோட்டா ” , போன்ற படங்களில் நடித்திருந்தார். இதில் குறிப்பாக யாஷிகா ” இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தில் படு கவர்ச்சியாக நடித்திருந்தார்.
சினிமா ஒருபக்கம் இருக்க விஜய் டிவில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா கவர்ச்சி உடையில் வளம் வர துடங்கினார் இதனால் யாஷிகாவிற்கென தனி ரசிகர்ப்பாட்டலாமே உருவாகியது .
அதன் பின் பட வாய்ப்புகள் வர தற்போது, யாஷிகா ஆனந்த் கைவசம் தமிழில் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து, மணியார் குடும்பம், கழுகு 2, ஜாம்பி, மூக்குத்தி அம்மன், தி லெஜண்ட் என அடுத்தடுத்து படங்களில் நடித்தார். இதனிடையே, சில மாதங்களுக்கு முன், யாஷிகா ஆனந்த் ஓட்டிவந்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது.
சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் ஒப்பந்தம் ஆகியிருந்த படங்களில் நடிக்க முடியாமல் போக பட தயாரிப்பாளர்களும் , இயக்குனர்களும் செய்வதறியாது குழம்பி விட்டனர். சில பாடங்களில் யாஷிகா பாதி வரை நடித்திருந்ததால் அவற்றை நீக்கவும் முடியாமல் இயக்குனர்கள் தவித்தனர். இதனால் தயாரிப்பாளர்களும் , இயக்குனர்களும் படப்பிடிப்பை ஒத்திவைத்திருந்தனர்.தற்போது முழுமையாக குணமடைந்த யாஷிகா மீண்டும் சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில், நடிப்பு போட்டோ ஷூட் என பிசியாக இருக்கும் யாஷிகா தற்போது, புதிய தொழிலில் களமிறங்க உள்ளார். அதாவது, யாஷிகா தற்போது தயாரிப்பாளராக ஒரு படத்தை தயாரிக்க உள்ளார். இவர் தயாரிக்கும் முதல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியாக உள்ளதாகவும், அதனை நடிகர் எஸ் ஜே சூர்யா வெளியிட இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.