அந்த 2 பெண்களை பக்கத்துல வெச்சுட்டு தான் கதை கேட்கிறார்: விஜய் சேதுபதியால் புலம்பும் இயக்குனர்கள்..!

Author: Udayachandran RadhaKrishnan
31 January 2023, 3:31 pm
Vijaysethupathi_Updatenews360
Quick Share

பிரபலங்கள் திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து, சீரியல் தொடர்களில் நடித்து தனது விடா முயற்சியின் மூலம் வெள்ளி திரையில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளவர் நடிகர் விஜய் சேதுபதி. தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் நடிகராக அறிமுகமானார். மக்களை ஈர்க்கும் கதையில் பிடித்தமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆகி, தற்போது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் மக்கள் செல்வனாக உருவாகியுள்ளார்.

விஜய் சேதுபதி ஹீரோவாகவும், வில்லனாகவும் கலக்கி வரும் இவர், எந்த விதமான கதைகளிலும் தயக்கம் காட்டாது நடித்து வருகிறார். 2 ஹீரோ சப்ஜெக்டிலும் தயங்காது நடித்து வரும் இவர், விக்ரம் வேதா, பேட்ட, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து கெத்து காட்டி வருகிறார். தற்போது ஜவான், காந்தி டாக்ஸ், விடுதலை உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இப்டி மக்கள் மனதிலும், திரையுலகிலும் நல்ல பெயரை பெற்ற இவர் குறித்த ஷாக்கிங் தகவல் சிலது இணையத்தில் உலா வருகிறது. அது என்னவென்றால், சமீப காலமாக, இயக்குனர்கள் இவரிடம் கதை சொல்லவே தயங்குகின்றார்களாம். ஏனென்றால் விஜய் சேதுபதி கதை கேட்கும் போது அருகில் எப்போதும் இரண்டு பெண்களை வைத்துக்கொண்டு தான் கதை கேட்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கதை சொல்ல வரும் இயக்குனர்களை அந்த பெண்களை பார்த்தே கதை சொல்ல சொல்கிறாராம் விஜய் சேதுபதி.

vijaysethupathy-updatenews360-3

இதன் காரணமாக பல இயக்குனர்கள் அப்சட்டில் இருப்பதாக தகவல் வந்துள்ளது. அந்த இரண்டு பெண்களும் விஜய் சேதுபதிக்கு நடிப்பு சொல்லி தரும் பெண்கள் என சொல்லப்படுகிறது. அவர்கள் கதை நன்றாக இருக்கின்றது என கூறினால் விஜய் சேதுபதி அக்கதையில் நடிக்க ஒப்புக்கொள்வார் என மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

Views: - 220

0

0