:”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி பாலன். “அருவி” திரைப்படத்தை தொடர்ந்து மலையாளத்தில் “கோல்ட் கேஸ்”, “படவெட்டு” தெலுங்கில் “சாகுந்தலம்” போன்ற திரைப்படங்களில் நடித்த அதிதி பாலன், தமிழில் “கருமேகங்கள் கலைகின்றது” என்ற திரைப்படத்தில் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
அதனை தொடர்ந்து “கேப்டன் மில்லர்”, “லைன்மேன்” போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட அதிதி பாலன் பால்புதுமையினர் குறித்து பேசியது நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
அப்பேட்டியில் நிருபர், அதிதி பாலனிடம் LGBTQ+ Pride பேரணியில் கலந்துகொண்டது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அதிதி பாலன், “அந்த பேரணிக்கு ஏன் பல பேர் கலந்துகொள்ள மறுக்கிறார்கள் என்று எனக்கு புரிந்ததில்லை. LGBTQ சமூகத்தில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அது விலக்கப்பட்ட ஒன்று என நான் நினைத்தது இல்லை. அது ஒரு பிரச்சனையாகவே எனக்கு தெரிந்தது இல்லை.
LGBTQ+ பேரணிக்கு என்னுடைய சகோதரிகளும் வந்திருந்தார்கள். எனது சகோதரிகள் ஒவ்வொரு வருடமும் அந்த பேரணிக்குச் செல்கிறார்கள். நெகட்டிவாக பார்க்கப்பட்டு வரும் ஒரு சமூகத்திற்கு பலரும் ஆதரவாக வருவதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நானும் அதில் பங்கெடுத்தேன் என நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது” என கூறினார்.
இவரது இப்பேட்டி இணையத்தில் வைரல் ஆன நிலையில் “உங்கள் கருத்துகளை மற்றவர்களிடம் திணிக்காதீர்கள்”, “வானவில்லா நீ” என்பது போன்ற மிக மோசமான விமர்சனங்களை இணையவாசிகள் அதிதி பாலன் மீது வைத்து வருகின்றனர்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.