“முரட்டு போஸா இருக்கே” – வேற லெவல் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்ட காற்று வெளியிடை நடிகை

22 February 2021, 10:48 pm
Quick Share

கார்த்திற்கு ஜோடியாக மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் அதிதி ராவ் ஹைதாரி. மணிரத்னம் படம் என்றாலே ஹீரோயின்கள் தனிக்கவனம் பெறுவார்கள், அந்த வரிசையில் அதிதி ராவை அதிகம் ரசிக்க தொடங்கினார்கள் ரசிகர்கள்.

2006 ஆம் ஆண்டு பிரஜாபதி என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானார். அதன்பின் சில இந்தி படங்களில் நடித்தார். இந்தியில் மெகா ஹிட்டான ராக்ஸ்டார் படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார். காற்றுவெளி படத்திற்கு பின் மணிரத்னம் இயக்கத்திலேயே செக்க சிவந்த வானம் படத்தில் நடித்த அதிதி ராவ் அதன்பின் மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ என்ற படத்தில் நடித்தார்.

நல்ல பாடகராகவும் நடனத்தில் சிறந்து விளங்குகிறார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அதிதி, இன்ஸ்டாவில் அடிக்கடி வந்து போகிறார். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் சுவற்றோடு சாய்ந்து கோக்குமாக்காக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த இளசுகள், “முரட்டு போஸா இருக்கே” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 6

0

0